அண்மைக்காலமாக, பல்வேறு புதிய மாற்றங்களையும் வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது 'வாட்ஸ் ஆப்'. அந்த வகையில், தற்போது மற்றுமொரு புதிய வசதியை
அறிமுகம் செய்யும் முயற்சியில்
இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
நாம் ஒரு செய்தியை அனுப்பிய பின், அதில் எதுவும் எழுத்துப்
பிழைகள் இருப்பின், அதைத் திருத்தம் செய்து கொள்ளக்கூடிய
வசதியை வழங்கும் முயற்சியில், 'வாட்ஸ்ஆப்' இறங்கி உள்ளது.
பல சமயங்களில், ஏதாவது எழுத்துப் பிழையுடன் ஒரு செய்தியை அனுப்பிய பின், உடனே அதைச் சரிசெய்து கொள்ள நினைத்தாலும் முடியாமல் போய்விடும். வேண்டுமானால், அந்த பிழையைக் குறிப்பிட்டு, மற்றுமொரு குறுஞ்செய்தியை அனுப்பலாம். ஆனால், முதலில் நாம் அனுப்பிய பிழை செய்தி அப்படியேத்தான் இருக்கும்.
இனி இந்த புதிய வசதி வந்தால், ஏற்கனவே அனுப்பிய அதே செய்தியை மீண்டும் திருத்தம் செய்து, அனுப்பலாம். இதுபோன்று எழக்கூடிய பிரச்சினைகளை இனி தவிர்க்க முடியும் என்கிறது
இந்நிறுவனம்.

