அமெரிக்காவில் உள்ள ஓர் இந்திய உணவகம் அந்நாட்டின் சிறந்த உணவகமாகத் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது.
வட கரோலினாவில் வட
இந்திய தெரு உணவு வகைகளை பரிமாறும் 'சாய் பானி' எனும் உணவகம் உள்ளது.
இங்கு பாவ் பஜ்ஜி, கோழி டிக்கா போன்ற சாட் உணவு வகைகள் மிகவும் பிரபலம். அதோடு 'தாலி' உணவு வகைகளும் இங்கு கிடைக்கின்றன.
சாய் என்றால் தேநீர், பானி என்றால் தண்ணீர் என்று இந்தியில் கூறப்படுகிறது. மலிவான, சுவையான, வித்தியாசமான உணவுகள் கிடைக்கும் என்று உணவகம் அதன் இணையப்பக்கத்தில் விளம்
பரப்படுத்தியுள்ளது.
இந்த உணவகத்தில் கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் இந்தியாவில் கிடைக்கும் அசல் தெரு உணவு போன்றே இருப்பதாகவும் ருசியில் எந்தவொரு குறையும் இல்லை என்கின்றனர் உணவகத்துக்கு வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள்.
வீட்டில் சமைக்கும் சாப்பாட்டுக்கு நிகராக இங்கு சாப்பாடு இருப்பதாக சிலர் கருதுகின்றனர். மேலும், அனைத்து உணவுகளும் குறைந்த விலையில் விற்கப்
படுகின்றன.
'ஜேம்ஸ் பியர்ட்' அறக்கட்டளை இந்த உணவு விருது நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
2020, 2021ஆம் ஆண்டுகளில் கிருமித்தொற்று பரவல் காரணமாக விருது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இவ்வாண்டு சிக்காகோவில் நடைபெற்ற உணவு விழாவில் 'சாய் பானி' கடை விருதைப் பெற்றது.

