முன்னோடித் தலைமுறை நடிகர்களிடமிருந்து நடிப்புக்கலையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

முன்னோடித் தலைமுறை நடிகர்களிடமிருந்து நடிப்புக்கலையைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

2 mins read

யுகேஷ் கண்­ணன்

சிங்கை தமிழ் மேடை நாட­கத் துறை­யில் பல ஆண்­டு­க­ளாக நடித்து வரும் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­ன­ரி­ட­மி­ருந்து நடிப்­புக் கலை­யைப் பற்­றி­யும் நாடக உத்­தி­களைப் பற்­றி­யும் அறிந்­தி­டப் பட்­டறை ஒன்­றுக்கு அவான்ட் நாட­கக்­குழு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இப்­பட்­டறை ஸ்டாம்ஃபர்ட் கலை­கள் நிலை­யத்­தில் ஜூன் 18, 19 ஆகிய தேதி­களில் காலை 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை நடை­பெற உள்­ளது. 13 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ரும் இப்­பட்­ட­றை­யில் பங்­கேற்­க­லாம்.

இப்­பட்­ட­றை­யில் பங்­கேற்க விரும்­பு­பவர் $30 கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டும்.

பட்­ட­றை­யின் இடையே மத்­திய உணவு வழங்­கப்­ப­டு­வ­து­டன் பட்­ட­றை­யின் முடி­வில், பங்­கேற்­புச் சான்­றி­த­ழும் வழங்­கப்­படும்.

இப்­பட்­ட­றை­யில் பங்­கேற்­ப­வர்­க­ளுக்கு ஜூன் 24, 25ஆம் தேதி­க­ளில் அவான்ட் நாட­கக்­குழு மேடை­யேற்­ற­வுள்ள '4ஜி' நகைச்­சுவை நாட­கத்­துக்­கான நுழை­வுச்­சீட்­டு­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

மாண­வர்­க­ளு­டன் பெற்­றோர்­களும் இணைந்து பங்­கேற்­கும் நோக்­கு­டன் ஜூன் மாத விடு­மு­றை­யின்­போது இப்­பட்­டறை ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக நாட­கக்­கு­ழு­வின் தலை­வர் திரு க. செல்­வ­நாதன், 54, தெரி­வித்­தார். முன்­னோ­டித் தலை­முறை நடி­கர்­கள் எவ்­வாறு நடிக்­கிறார்­கள், நாட­கத்­திற்கு எவ்­வாறு தயா­ரா­கி­றார்­கள், மேடை­யில் எவ்­வாறு நடிக்க வேண்­டும் போன்­ற­வற்­றைப் பட்­ட­றைக்கு வரு­ப­வர்­கள் கற்­பர் என அவர் கூறி­னார்.

அடுத்த வாரம் நடக்­க­வி­ருக்­கும் நாட­கத்­தில் நான்கு தலை­மு­றை­க­ளைச் சேர்ந்த நடி­கர்­கள் நடிக்­க­வுள்­ள­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சிங்­கப்­பூ­ரைத் தாக்­கிய தொடக்க கால­கட்­டத்­தில், முதி­யோர் இல்­லம் ஒன்­றில் நிக­ழும் கல­வ­ரங்­களை மையப்­ப­டுத்­திய நகைச்­சுவை நாட­க­மாக இது அமை­யும்.

வச­தி­கு­றைந்த முதி­யோ­ரும் இந்­நா­ட­கத்­தைக் கண்டு களிக்க வேண்­டும் என்ற நோக்­கு­டன் அவான்ட் நாட­கக்­குழு 'ஸ்பான்­சர் அன் ஆடி­யன்ஸ்' என்ற நன்­கொ­டைத் திட்­டத்­தைத் தொடங்கியுள்ளது.

இதன் வழி சன்­லவ் இல்­லம், ஸ்ரீ நாரா­யண மிஷன் போன்ற முதி­யோர் இல்­லங்­களில் இருக்­கும் முதி­யோர் பய­ன­டை­ய­வுள்­ள­னர்.

இப்­பட்­ட­றை­யில் பங்­கேற்­க­வும் நாட­கத்­துக்­கான நுழை­வு­ச்சீட்­டு­க­ளைப் பெற­வும் அவான்ட் நாடகக் குழு­வின் ஃபேஸ்புக் அல்­லது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்தை நாட­லாம்.