செட்டிநாடு முட்டை பொடிமாஸ்

செட்டிநாடு முட்டை பொடிமாஸ்

1 mins read
5b467933-fc9c-4b02-9904-c1490c24f52f
-

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளள. மிக எளிமையாக முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடலாம் வாருங்கள்.

பொடிமாஸ் செய்வதற்குத் தேவையான பொருட்கள்:

முட்டை - 5, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 1, சீரகம் - 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி - சிறிது, தேங்காய் எண்ணெய் - 1 மேசைக் கரண்டி,

உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: வெங்காயம், ப.மிளகாய், கொத்துமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். முட்டை நன்கு வெந்ததும், கொத்துமல்லி இலையைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை

பொடிமாஸ் தயார்.