'வே' புர­தம்: நம் கவ­னத்­துக்கு

'வே' புர­தம்: நம் கவ­னத்­துக்கு

2 mins read
09bb7466-80ec-4b8d-a7a0-eb989f9f09bb
'வே' புரத மாவு போன்ற கூடுதல் சத்துப் பொருள்களைவிட உணவில் உள்ள புரதத்தை முதலில் நாடுவதே சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். படம்: இணையம் -

விளை­யாட்­டா­ளர்­களும் உடற்­ பயிற்சி ஆர்­வ­லர்­களும் உட­லில் உள்ள தசை­க­ளைப் பெருக்­கப் பயன்­ப­டுத்­தும் 'வே' புர­த­மாவை, மூத்­தோர் சில­ரும் பயன்­ப­டுத்தி வரு­வ­தைப் பார்க்­க­லாம்.

உடல் எடை­யைக் குறைக்­க­வும் நீரி­ழிவு நோயைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­வும் இந்த 'வே' புர­த­மாவு உத­வும் என்று கூறி சிலர் இதைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். சிலர், உட­லி­லி­ருக்­கும் புர­தம் குறை­வ­தால் அதை ஈடு­கட்ட 'வே' புர­த­மாவை உட்­கொள்­கின்­ற­னர்.

'வே' புர­தம் என்­றால் என்ன?

சீஸ் எனப்­படும் பாலா­டைக்­கட்­டியை உற்­பத்தி செய்­யும்­போது 'வே' புர­தம் கிடைக்­கிறது. இதை உலர்த்தி மாவா­கத் தயா­ரித்து விற்­கின்­றன நிறு­வ­னங்­கள்.

'வே' புர­தத்­தில் உள்ள நன்­மை­கள்

'வே' புர­தம், சுத்­த­மான, முழு­மை­யான புர­தம் என்று அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த கிலீவ்­லந்து மருந்­த­கம் கூறு­கிறது. அதில் உட­லுக்­குத் தேவை­யான ஒன்­பது அமினோ அமி­லங்­கள் உள்­ளன. இந்த அமி­லங்­கள் தசை­களை உரு­வாக்­கு­வ­து­டன், எதிர்ப்­பாற்­றல் அணுக்­களை உரு­வாக்­கு­வ­தாக மருந்­த­கம் தெரி­வித்­தது. இத­னால் காயங்­கள் ஆற­வும் இந்த 'வே' புர­தம் உத­வு­கிறது.

'வே' புர­தம் உயர் ரத்த அழுத்­தத்­தை­யும் உட­லில் உள்ள சர்க்­கரை அள­வை­யும் குறைக்­கக்­கூ­டி­யது என்­றும் சில ஆய்­வு­கள் கூறி­யுள்­ளன.

கவ­னிக்க வேண்­டி­யவை

உட­லுக்­குப் போது­மான புர­தம் உண­வில் கிடைக்­க­வில்லை என்­றால் இதை எடுத்­துக்­கொள்­ள­லாம் என்று கிலீவ்­லந்து மருந்­த­கம் குறிப்­பி­டு­கிறது.

உதா­ர­ணத்­துக்கு, நாள்பட்ட நோயாளிகள் உட­லில் உள்ள சத்தை அதி­க­ரிக்க இதை உட்­கொள்­ள­லாம் என்று மருத்­துவ ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

'வே' புர­தம் சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு மலச்­சிக்­கல், வயி­ற்றுப்­போக்கு, குமட்­டல், உப்­பி­சம் போன்­றவை ஏற்­ப­டக்­கூ­டும்.

மேலும், 'வே' புர­த­மாவு தயா­ரிப்­பில் சர்க்­கரை, பதப்­ப­டுத்­தும் பொருள்­கள் போன்­றவை சேர்க்­கப்­பட வாய்ப்புள்­ளது. உட­லில் அள­வுக்கு அதி­க­மான புர­த­மும் சேரவும் வாய்ப்புள்­ளது.

மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னை­யைப் பெற்று 'வே' புர­த­மாவை எடுத்­துக்­கொள்­வது உகந்­தது.