பெற்றோரிடம் பலமுறை அடிவாங்கி குழந்தைகளுக்கு பின்னாளில் மன அழுத்தமும் பதற்றமும் ஏற்படும் சாத்தியம் இருமடங்கு அதிகம் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் அந்த ஆய்வை நடத்தினர். பிள்ளைகளை அடிப்பது அவர்களின் மனநலனைப் பாதிக்கும். சிறுவர் வதை, புறக்கணிப்பு ஆகியவற்றில் ஏற்படும் உணர்வு பிள்ளை அடிவாங்கும்போதும் தோன்றும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

