சுவையான கொம்­புச்சா தேநீர்

சுவையான கொம்­புச்சா தேநீர்

1 mins read
4f799211-2fb4-421e-a437-edadd683674a
கொம்­புச்சா தேநீரைச் செய்ய காடிச் சத்து (நொதி), சீனி, கறுப்பு அல்­லது பச்சை தேயிலை ஆகி­யவை தேவை.இவற்­றின் கலவை ஒரு வாரத்­துக்­குப் புளிக்க வைக்­கப்­படுகிறது.கொம்­புச்சா தேநீர் உட­லுக்­குப் பல நன்­மை­க­ளைத் தரும் என்று கூறப்­பட்­ட­போ­தும் அது­பற்றி கூடு­தல் ஆய்­வு­கள் தேவை. படம்: ஏஎ­ஃப்பி -

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல கடை­களில் நீங்­கள் கொம்­புச்சா தே நீரைப் பார்த்­தி­ருக்­க­லாம். இனிப்­பும் புளிப்­பும் கலந்த அதைச் சுவைத்­தி­ருக்­க­லாம்.

இன்று இளை­யர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மான கொம்­புச்சா தேநீர், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் சீனா­வில் தோன்றி, பின்­னர் ஜப்­பான், ரஷ்யா போன்ற நாடு­களில் பிர­ப­லம் ஆனது. இப்­போது ஐரோப்பா, அமெ­ரிக்காவிலும் அது மிகப் பிர­ப­லம்.

தயி­ரில் உள்ள நன்­மை­கள் இதி­ல் உண்டு என்று கூறப்படுகிறது. கொம்­புச்சா தேயில் புரோ­பயோட்­டிக் எனப்­படும் நல­நுண்­ணு­யி­ரி­யும் வைட்­ட­மின் பி சத்­தும் அதி­கம் உள்­ளது. அத­னால் இது செரி­மா­னத்­துக்கு உத­வு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், உட­லில் உள்ள கசடை நீக்கி, உட­லுக்கு எதிர்ப்­பு­ச்சக்­தியையும் புதுத்­தெம்­பை­யும் இந்த பானம் அளிக்­கும் என்று ஆர்­வ­லர்­கள் கூறு­கின்­ற­னர்.