75வது ஆண்டு நிறைவு, 75 பேர், 7.5 கி.மீ. நடை

75வது ஆண்டு நிறைவு, 75 பேர், 7.5 கி.மீ. நடை

2 mins read
b54267e1-7199-4b60-8e7d-53b49b9b6772
-

யுகேஷ் கண்­ணன்

ஸ்ரீ நாரா­யண மிஷன் தனது 75ஆம் ஆண்டு நிறைவு விழாவை 75 உறுப்­பி­னர்­க­ளு­டன் 7.5 கிலோ­

மீட்­டர் மர­பு­டைமை நடை­யோடு கொண்­டா­டி­யது.

இனம், மொழி, சமய வேற்­றுகள்­இன்றி அனை­வ­ருக்­கும் அன்­போ­டும் அக்­க­றை­யோ­டும் சேவை­யாற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­தோடு 1948ஆம் ஆண்டு தொடங்­கப்

­பட்­டது ஸ்ரீ நாரா­யண மிஷன்.

தொடர்ந்து 1970களில் 'ஸ்ரீ

நாரா­யண மிஷன், ஒரு தாதிமை தாதிமை இல்­லத்தை' நிறு­வி­யது.

தற்­பொழுது தாதிமை இல்­லம், இரண்டு முதியோர் பரா­ம­ரிப்பு மையங்கள், ஆத­ர­வற்ற ஆண்­க­ளுக்­கான உதவி மையம் என மூன்று நிலை­யங்­க­ளின் வழி சமூ­கத்­திற்கு சேவை­யாற்றி வரு­கிறது ஸ்ரீ நாரா­யண மிஷன்.

சிங்­கப்­பூ­ரின் முதல் பிர­த­மர் திரு லீ குவான் இயூ, 1965 ஆகஸ்ட் 9ல் மலே­சி­யா­வி­ட­மி­ருந்து சிங்­கப்­பூர் பிரி­வ­தைத் தொலைக்­காட்­சி­யில் அறி­வித்த பின்­னர்

அவ்­வாண்டு செப்­டம்­பர் 12ஆம் தேதி பழைய ஸ்ரீ நாரா­யண மிஷன் கட்­ட­டத்­தில் முதல்­மு­றை­யாக பொது இடத்­தில் தோற்­ற­

ம­ளித்­தார். 313 செம்­ப­வாங் டிரை­வில் உள்ள அந்த பழைய கட்­ட­டம் ஒரு நினை­வுச்­ சின்­ன­மாக

இன்­றும் திகழ்­கிறது.

75வது ஆண்டு நிறைவை முன்­னிட்டு 'நேற்று, நாளை, இன்று' என்ற கருப்­பொ­ரு­ளில் இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று நடத்­தப்­பட்ட மர­பு­டைமை நடை, செம்­ப­வாங் டிரைவ் நினை­வுச்

சின்­னத்­தி­லி­ருந்து தொடங்கி, ஈசூன் அவென்யூ 6ல் கட்­டப்­பட்டு வரும் புதிய ஸ்ரீ நாரா­யண மிஷன் கட்­ட­டத்­தைக் கடந்து, ஈசூன் அவென்யூ 5ல் அமைந்­துள்ள தற்­போ­தைய ஸ்ரீ நாரா­யண மிஷன் கட்­ட­டத்­தில் நிறை­வுெ­பற்­றது.

ஸ்ரீ நாரா­யண மிஷன் 75

ஆண்­டுகளைக் கடந்து வந்த பாதை­யை­யும் வளர்ச்­சி­யை­யும் உறுப்­பி­னர்­க­ளுக்கு நினை­வூட்ட இந்த நடை ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­தா­கக் கூறி­னார் அதன் நிர்­வாக குழு துணைத் தலை­வ­ரும் நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வ­ரு­மான திரு அனில் சரசி ஜாக்­சன், 53.

தமது ஆறா­வது வய­தி­லி­ருந்து ஸ்ரீ நாரா­யண மிஷனின்

தொண்­டூ­ழி­யப் பணி­களில் ஈடு­பட்டு வரும் திரு ராக­வன் அசோ­கன், 70, இந்நடை­யில் பங்­கேற்­றது மிகுந்த மகிழ்ச்சி அளித்­த­தா­கக் கூறி­னார்.

சமூக சேவ­க­ரா­கப் பணி­பு­ரிந்து வரும் ரஸினா ஷவுக்­கத், 38, தனது தாத்தா ஸ்ரீ நாரா­யண மிஷ­னு­டன் இணைந்து தொண்­டூ­ழி­யம் செய்­த­தால் தானும் அந்­தப் பணி­யைத் தொட­ரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை அளித்த உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­ச­ரும் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டாக்­டர் முகம்­மது ஃபை‌‌‌சல் இப்­ரா­ஹிம், கேக் வெட்டி கொண்­டாடி, ஸ்ரீ நாரா­யண மிஷ­னின் சாத­னை­களை விளக்­கி­னார்.

மரபுடைமை நடையில் பங்கேற்ற உறுப்பினர்கள். படம்: ஸ்ரீ நாரயண மிஷன்