சாதாரணமாக கோழி ஒரு நாளைக்கு ஒரு முட்டை இடும். ஆனால் கேராளாவில் இருக்கும் சின்னு என்ற கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டு அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறது.
கேரள மாநிலம் அம்பலப்புழாவில் வசித்து வரும் பிஜுகுமார் வளர்க்கும் கோழிகளில் சின்னு என்ற கோழி அவருக்கு செல்லப்பிராணியாக வளர்ந்து வந்தது.
ஒருநாள் சின்னு திடீரென தன்னுடைய காலைச் சற்றுத் தூக்கித் தூக்கி நடந்து கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த பிஜு அதன் காலில் அடிபட்டிருக்கலாம் என்று நினைத்து, சின்னுவின் காலில் தைலத்தைத் தடவி உள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் சின்னு ஒரு முட்டை போட்டு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து மீண்டும் அடுத்தடுத்து சில முட்டைகளை இடத் தொடங்கியது. நேரம் ஆக ஆக சின்னு, முட்டை இட்டுக்கொண்டே இருந்தது. இந்த விஷயம் அந்தப் பகுதி
முழுவதும் பரவியது.
தகவலறிந்து ஏராளமானோர் சின்னுவைப் பார்க்கத் திரண்டனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சின்னு முட்டை இடுவதை நிறுத்தவே இல்லை. தொடர்ந்து போட்டுக் கொண்டேருந்தது.
பிஜுகுமார் அதுபற்றி கூறுகையில், "காலை சுமார் 8.30 மணிக்கு முட்டை இடத்தொடங்கிய சின்னு, மதியம் 2.30 மணி வரை முட்டைகளைப் போட்டுக்கொண்டே இருந்தது. 6 மணி நேரத்திற்குள் மொத்தம் 24 முட்டைகளை இட்டது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
என்னுடைய செல்லப் பிராணி இப்படி ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்றார்.
இந்த அதிசயம் குறித்து திருச்சூரில் உள்ள கால்நடை பல்
கலைக்கழக உதவி பேராசிரியர் வினோத் கூறுகையில், "ஒரு கோழி 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இடுவது என்பது மிகவும் அதிசயமான நிகழ்வு ஆகும். இதற்கு என்ன காரணம் என்று உடனடியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த பிறகே என்ன காரணம் என்பது குறித்துச் சொல்ல முடியும்," என்றார்.
இந்தச் சம்பவம் ஆலப்புழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் '6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்ட சின்னு ஓர் அதிசய கோழி' என சமூக வலைத்தளங்களில் புகைப்
படங்களுடன் காணொளியும் வெளியாகி, பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பும் கேரளாவில் ஒரு கோழி இடும் முட்டையில் மஞ்சள் கருவுக்குப் பதில் பச்சைக் கரு இருந்ததும் அதன் மூலம் பொரித்த கோழிகளும் பச்சை கருகொண்ட முட்டையையே இட்டதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.

