நூற்றாண்டைக் காணும் சிங்கைத் தமிழ் சங்கத்துக்குப் புதிய செயற்குழு

நூற்றாண்டைக் காணும் சிங்கைத் தமிழ் சங்கத்துக்குப் புதிய செயற்குழு

2 mins read
28fe9fca-775e-4eee-b83c-e81f4d96ca2f
-

தமி­ழர் சீர்­தி­ருத்த சங்­க­மாக 1922 முதல் சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு சீர்­தி­ருத்­தப் பணி­களை மேற்­கொண்டு, 2003 முதல் சிங்­கைத் தமிழ்ச் சங்­க­மாக தொடர்ந்து தொண்­டாற்றி வரு­கிறது. இம்­மா­தம் 23ஆம் தேதி தனது 100வது ஆண்டை எட்­டு­கிறது சிங்­கைத் தமிழ்ச் சங்­கம்.

2019ல் மூன்று சிங்­கப்­பூர் தமிழ் இளை­ஞர்­க­ளு­டன் சங்­கத்­தின் தலை­மைப் பொறுப்­பேற்ற திரு­மதி விஜி ஜெக­தீஷ், குறு­கிய காலத்­தி­லேயே, தொழில்­நுட்­பம், மின்­னி­யல் தளங்­களில் தமி­ழைக் கொண்டு சேர்க்­கும் பொறுப்பை இளை­யர்­க­ளி­டம் ஒப்­ப­டைத்­தார்.

'மாத்தி யோசி', 'ஒரு குட்டி கதை சொல்­லட்டா', 'ஒரு கேளிச்­சித்­திர கதை சொல்­லட்டா' போன்ற புத்­தாக்க மின்­னி­லக்­கப் படைப்­பு­களின் மூலம் இளை­யர்­கள் சங்­கத்­தின்பால் அதிக நாட்­டம் செலுத்தி வருகின்றனர்.

குறு­கிய காலத்­தில் 60க்கு மேற்­பட்­ட­வர்­கள் அடுத்த 100 ஆண்டு ­க­ளுக்­கான வர­லாற்றை எழுத துணி­வு­டன், புத்­தாக்க சிந்­த­னை­யு­ட­னும் சங்­கத்­தில் உறுப்­பி­னர்­களாக இணைந்து வலு சேர்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

சங்­கத்­தின் தலைமை மற்­றும் செய­ல­வைக் குழு­வில் மாற்­றம் கொண்­டு­வந்­தால் மட்­டுமே சங்­கம் தொடர்ந்து புத்­தாக்க சிந்­த­னை­யு­ட­னும், புத்­து­ணர்ச்­சி­யு­ட­னும் இயங்க முடி­யும் என்ற நோக்­கத்­தோடு, முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு கார்த்­தி­கே­யன் தலைமை பொறுப்­பேற்று இளை­யர்­களை வழி நடத்­த­வி­ருக்­கி­றார்.

அவ­ருக்கு உறு­து­ணை­யாக அனு­ப­வ­சா­லி­க­ளை­யும் இளை­ஞர்­களை­யும் சரி­ச­ம­மாக கொண்ட ஆற்­றல்­மிகு செய­லவை உறுப்­பி­னர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர்.

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயலவை உறுப்பினர்கள்:

(முன் வரிசை இடமிருந்து இரண்டாவதிலிருந்து) தலைவர் கிருஷ்ணமூர்த்தி கார்த்திகேயன், துணைத் தலைவர் குமரன் பரதன், ஆலோசகர் விஜி ஜெகதீஷ் மற்றும் இதர உறுப்பினர்கள். படம்: சிங்கைத் தமிழ் சங்கம்