இன்று அனைத்துலக யோகா தினம்

இன்று அனைத்துலக யோகா தினம்

2 mins read
9301b5f8-4a36-4019-82f3-cd855bcb5632
-

உல­கம் முழு­வ­தும் இன்று கொண்­டா­டப்­படும் அனைத்­து­லக யோகா தினத்­திற்கு

வித்­திட்ட நாடு இந்­தி­யா­தான்.

ஐயா­யி­ரம் ஆண்­டு­கள் பழைமை வாய்ந்த யோகா கலை­யின் பெரு­மையை உல­கம் முழு­வ­தும் பர­வச் செய்ய யோகா தினம் ஆண்டுதோறும் கொண்­டா­டப்­பட்டு வருகிறது.

ஐநா பொதுச்­ச­பைக் கூட்­டத்­தில் 2014ஆம் ஆண்டு செப்­டம்­பர் 27ஆம் தேதி உரை­யாற்­றிய, இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி ஜூன் 21ஆம் தேதியை அனைத்து­லக யோகா நாளாக ஆண்­டின் ஒரு நாளை ஐக்­கிய நாடு­கள் சபை அறி­விக்க வேண்­டும் என்று

வலி­யு­றுத்­தி­னார்.

ஜூன் 21ஆம் தேதி பூமி­யின் வட

அரைக்­கோ­ளத்­தில் மிக நீண்ட நாள் ஆகும். இதனை முன்­னிட்டு இந்­தி­யா­வின் நிரந்­தர ஐநா பொதுக்­குழு உறுப்­பி­னர் அசோக்

குமார் முகர்ஜி அதே ஆண்டு டிசம்­பர் மாதம் அனைத்­து­லக யோகா தினத்­திற்­கான

வரைவு அறிக்­கையை ஐநா சபை­யில் சமர்ப்­பித்­தார்.

இதற்கு அமெ­ரிக்கா, கனடா, சீனா

உட்­பட 177 நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்­தன. இதன் மூலம் ஜூன் 21ஆம் தேதி அனைத்­து­லக யோகா தினம் என்று அதி­கா­ர­பூர்­வ­மாக

ஐநா சபை மூலம் அறி­விக்­கப்­பட்­டது.

அன்றைய நாளில் ஏராளமான பொது மக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு களால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

வரும் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் பத்தாயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

யோகா தினத்தை முன்னிட்டு

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையம்,

சில கடைத்தொகுதிகள், ஊழியர் தங்கும் விடுதிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் யோகாசன

நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

யோகா தினத்தன்று மற்றவர்களுடன் இணைந்து யோகாசனம் செய்கிறார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. படம்: கோப்புப்படம்