குளிர்காலத்தில் பொதுவாக கைகள் குளிர்ந்த நிலைக்கு மாறிவிடும். ஆனால் சிலருக்கு பல நேரங்களில் கைகள் குளிர்ச்சியாகவே இருக்கும். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ரத்தச்சோகை, வைட்டமின் 'டி' குறைபாடு, தைராய்டு போன்ற
பிரச்சினைகளாலும் கைகள் குளிர்ச்சித் தன்மை அடையும்.
மேலும் சிவப்பு அணுக்கள்
பற்றாக்குறை நிலவினால்
ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் நேரும். அதன் காரணமாக கைகள் குளிர்ச்சி அடையக்கூடும்.
ரத்தச் சோகை பிரச்சினையும் உருவாகும். இரும்பு சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணம். இரும்பு சத்து அதிகம் கொண்ட உணவை உட்கொண்டு வந்தால் ரத்த சோகை நீங்கு
வதோடு கைகளில் குளிர்ச்சியும் நீங்கிவிடும்.
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை விரல்களை குளிர்வித்து
விடும். கைகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி
விடும்.
ஒருசிலருக்கு விரல்பகுதிகளில் மட்டும் அதிக குளிர்ச்சித் தன்மை நிலவும். விரல்கள் உணர்ச்சியற்ற நிலைக்குத் தள்ளப்படும். அதற்கு 'ரோனால்ட் சிண்ட்ரோம்' என்று பெயர்.
இந்தப் பாதிப்பு காரணமாக
தமனிகள் குறுகி ரத்த ஓட்டம் தடைப்படும். அதனால் சருமம் சிவப்பு, நீல நிறத்துக்கு மாறும். மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
வைட்டமின் 'டி' குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம். அதனால் கைகள், கால்களில் உணர்வின்மை, குளிர்தன்மை, கூச்ச உணர்வு, நரம்புகளில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். வைட்டமின் பி-12 குறைபாடு அதிகரித்து கொண்டிருந்தால் ரத்தசோகை, உடல் பலவீனம், மனச்சோர்வு, வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் நேரும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்கள், உறுப்புகளுக்கும் பாதிப்பு நேரும். அதனால் லூபஸ் எனப்படும் வீக்கம் தோன்றும். அவை நீடித்தால் சிறுநீரகம், மூட்டுகள், ரத்த அணுக்கள், சருமம் போன்றவை பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

