முழங்கால் வலியைத் தடுக்கும் நடைப்பயிற்சி

முழங்கால் வலியைத் தடுக்கும் நடைப்பயிற்சி

2 mins read
84d31bc8-4df0-4d60-83c9-b644943314ec
படம்: அன்ஸ்பிலாஷ் -

கீல்­வாத பாதிப்­பு­டை­ய­வர்­கள் நடைப்­ப­யிற்சி செய்­வ­தன்­மூ­லம் முழங்­கால் வலி­யைத் தடுக்­க­லாம் என்று புதிய ஆய்வு முடிவு கூறு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் மட்­டும் 32 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் கீல்­வாதத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உடற்­ப­யிற்­சி­யா­கச் செய்­கை­யில், நடப்­பது இத­யத்­திற்கு நல்­லது என்று பல்­லாண்டு கால­மா­கக் கூறப்­பட்டு வரு­கிறது. அண்­மை­யில், மனச்­சோர்வு, அறி­வாற்­றல் குறை­பாடு ஆகி­ய­வற்­றுக்­கும் நடைப்­பயிற்சி மருந்­தாக அமை­யும் எனக் கண்­ட­றி­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில், 'வைலி இணைய நூல­கம்' வெளி­யிட்­டுள்ள புதிய ஆய்­வுக் கட்­டு­ரை­யா­னது, மூட்­டு­களில் ஏற்­படும் வலி­யைக் குறைக்­க­வும் உத­வும் என்று குறிப்­பிட்­டு இருக்கிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இந்த ஆய்­விற்­காக 50 வய­திற்கு மேற்­பட்ட, முழங்­கால் கீல்­வாத பாதிப்­பு­டைய ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோ­ரி­டம் ஆய்­வா­ளர்­கள் கருத்­தாய்வு மேற்­கொண்­ட­னர்.

பங்­கேற்­பா­ளர்­கள் எவ்­வ­ளவு உடற்­ப­யிற்சி மேற்­கொண்­ட­னர், கீல்­வா­தத்­திற்­கான அறி­கு­றி­கள், வலி­யின் தீவிரத்தன்மை ஆகிய விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­பட்­டன.

நான்­காண்­டு­க­ளுக்­குப் பிறகு, நடைப்­ப­யிற்சி செய்­யாத 37 விழுக்­காட்­டி­னர் அடிக்­கடி வலி­யால் அவ­திப்­பட்­டது தெரி­ய­வந்­தது. நடைப்­பயிற்சி மேற்­கொண்­டோ­ரில் 26 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே அத்­த­கைய வலி ஏற்­பட்­டது.

மூட்­டு­களில் ஏற்­படும் அழற்­சியே கீல்­வா­தம் எனப்­ப­டு­கிறது. அதி­லும், மூட்­டு­களில் உள்ள குருத்­தெ­லும்­பு­கள் முறி­வ­தால் ஏற்­படும் 'ஆஸ்­டி­யோ­ஆர்த்­ரைட்­டிஸ்' எனப்­படும் தேய்­மான கீல்­வா­தத்­தால்­தான் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். பொது­வாக, இடுப்பு, முழங்­கால், தண்­டு­வ­டம் போன்ற எடை­யைத் தாங்­கும் மூட்­டு­களில் இந்த பாதிப்பு ஏற்­படும். கைவி­ரல்­கள், கட்­டை­வி­ரல், கழுத்து, கால் பெரு­வி­ரல் ஆகிய உறுப்­பு­களும் இத­னால் பாதிக்­கப்­ப­ட­லாம்.

இந்­நி­லை­யில், எல்­லா­ரும் எவ்­வி­டத்­தி­லும் எளி­தா­கச் செய்­யக்­கூ­டிய நடைப்­ப­யிற்சி முழங்­கால் வலி­யில் இருந்து விடு­தலை தரக்­கூ­டும் என்­ப­தைத் தங்­க­ளது ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வின் ஹூஸ்­ட­னில் உள்ள பெய்லர் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் துணைப் பேரா­சி­ரி­யர் கிரேஸ் சியோ வெய் லோ கூறி­னார்.

உடற்­ப­யிற்­சி­, தசை­க­ளை­யும் கீல்­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட மூட்டு­க­ளைச் சுற்­றி­யுள்ள தசை­நார்­க­ளை­யும் வலுப்­ப­டுத்­து­கிறது. அத்­து­டன், இடுப்பு, கைகள், கால்­கள் போன்ற மற்ற மூட்­டுப்­ப­கு­தி­களி­லும் கீல்­வாத பாதிப்­பைக் குறைக்க உடற்­ப­யிற்சி உத­வ­லாம் என்­றும் தமது ஆய்­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கத் திரு­வாட்டி கிரேஸ் குறிப்­பிட்­டார்.

ஏற்­கெ­னவே வலி­யால் துன்­புறு­வோர் மிகை­யாக உடற்­ப­யிற்சி செய்­யா­த­படி கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­கி­றார் நியூ­யார்க் லேங்­கான் சுகா­தா­ரப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் விளை­யாட்டு மருத்­துவ நிபு­ணர் டாக்­டர் ஜஸ்­டின் எல்­ப­யர்.

நீண்ட நேரம் நடப்­பது, கடு­மை­யான கீல்­வா­தம் உள்ள சில நோயா­ளி­க­ளுக்கு வலியை அதி­கப்­ப­டுத்தி­வி­ட­லாம் என்­றார் டாக்­டர் ஜஸ்­டின். அதே நேரத்­தில், இலே­சான கீல்­வாத வலி இருப்­போ­ருக்கு நடைப்­ப­யிற்சி சிறந்­த­தொரு உடற்­பயிற்சி என்று அவர் குறிப்­பிட்­டார்.

முத­லில் குறை­வான தொலை­விற்கு நடக்­கத் தொடங்கி, பின்­னர் படிப்­ப­டி­யா­கத் தொலைவை அதி­க­ரிக்க வேண்­டும் என்­பது டாக்­டர் ஜஸ்­டி­னின் பரிந்­துரை.

எல்லாவற்றிற்கும் மேலாக, நடைப்பயிற்சிக்கு ஒரு காசுகூட செலவிடத் தேவையில்லை.