சீனாவில் இணைய செல்வாக்காளர் ஆக இனி தகுதிநிலை அவசியம்

சீனா­வில் சமூக ஊட­கங்­களில் செல்­வாக்­கா­ளர்­க­ளாக வலம் வந்து பல்­லா­யி­ரம் பேரால் பின்­தொ­ட­ரப்­ ப­டு­ப­வர்­கள் இனி சட்­டம், மருத்­து­வம் போன்ற தலைப்­பு­களில் கருத்­து­ரைப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு அத்­து­றை­யில் நிபு­ணத்­துவ தகுதி இருப்­பது அவ­சி­யம்.

சீன அர­சாங்­கம் இந்த புதிய விதி­மு­றை­களை சென்ற செவ்­வாய்க்­கி­ழமை 21ஆம் தேதி அறி­வித்­தது.

இணைய செல்­வாக்­கா­ளர்­க­ளுக்­கான நடத்தை விதி­முறை­களை சீனா­வின் வானொலி, தொலைக்­காட்சி நிர்­வா­கத் துறை­யும் கலா­சார, சுற்­றுப்­ப­யண அமைச்­சும் இணைந்து உரு­வாக்­கின. இணை­யத்­தில் நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யும் தளங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோர் தங்­கள் தகு­தி­ச்சான்­றி­த­ழைக் குறிப்­பிட்ட தளத்­தி­டம் காட்டவேண்டும். அவை அவற்றை சரி­பார்த்த பிறகே அவர்­கள் அத்­த­ளத்­தைப் பயன்­ படுத்தி கருத்­து­ரைக்க முடி­யும்.

சீனா அண்­மைய ஆண்­டு­க­ளாக அதன் இணை­யத்­த­ளத்­தை­யும் ஊட­கப் பிர­ப­லங்­க­ளைப் பின்­பற்­றும் கலா­சா­ரத்­தை­யும் கட்­டுப்­ப­டுத்த முயன்று வரு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!