மறதிநோய் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்

மறதிநோய் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்

1 mins read
16a5aad9-8aa0-4c87-8074-823eb6430b78
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் 78 மில்லியன் பேருக்கு மறதிநோய் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உல­கில் 55 மில்­லி­யன் பேருக்கு தற்­போது மற­தி­நோய் உள்­ளது என்று உலக சுகா­தார அமைப்பு கூறு­கிறது. உல­கெங்­கும் மர­ணம், உடல் குறைபாடு ஆகி­ய­வை ஏற்­ ப­டுவதற்கு ஏழா­வது முக்­கிய காரணம் மற­தி­நோய் ஆகும்.

நல­மிக்க வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்­றி­னால் மற­தி­நோய் அபா­யத்தை 43 விழுக்­காட்டு மக்­கள் வரை குறைக்­கக்­கூ­டும் என்று ஓர் ஆய்வு கூறு­கிறது.

அமெ­ரிக்க நரம்­பி­யல் சங்க ஆய்­வா­ளர்­கள் 30 ஆண்­டு­க­ளாக 12,000 பேரின் நல்ல பழக்க வழக்­கங்­க­ளைக் கண்­கா­ணித்­த­னர்.

அமெ­ரிக்க இத­ய­ந­லச் சங்­கம் பட்­டி­ய­லிட்ட ஏழு நல்ல உடல்­ந­லப் பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டித்­த­வர்களில் 43 விழுக்காட்டின­ருக்கு, மற­தி­நோய் அபா­யம் குறைந்­தது.

ரத்த அழுத்­தம், உயர் ரத்­தக் கொழுப்பு, ரத்த சர்க்­கரை அளவு ஆகி­ய­வற்­றைக் குறைப்­பது முதல் மூன்று நல்ல பழக்­க­வ­ழக்­கங்­கள் ஆகும். இவற்றைக் கட்டுக்குள் வைத்தால் இதயம், சிறுநீரகம், கண்கள், ரத்தநாளங்கள் போன்ற வற்றுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். அடுத்­தது உடற்­ ப­யிற்சி செய்­வது. நல்ல உண­வுப் பழக்கங்­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தும் மற­தி­நோய் அபா­யத்­தைக் குறைக்­கும் வழி­களில் ஒன்று.

உடல் எடை­யைக் குறைத்­தால் இத­யம், நுைரயீ­ரல், ரத்த நாளங்­கள் மீதான அழுத்­தம் குறை­கிறது.

இறு­தி­யாக புகைப்­பி­டித்­த­லைக் கைவி­டு­வது. மனதைத் துடிப்புடன் வைத்து, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதும் உதவும் என்றது பிரிட்டிஷ் மறதிநோய் சங்கம்.