வைட்டமின் டி குறைபாட்டுக்கும் மறதிநோய்க்கும் தொடர்பு

வைட்­ட­மின் டி குறை­பாட்­டுக்­கும் மற­தி­நோய், வாதம் ஆகி­யவை ஏற்­படும் அபா­யம் கூடு­வ­தற்­கும் தொடர்பு இருப்­ப­தாக புதிய ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது.

தென் ஆஸ்­தி­ரே­லி­யப் பல் ­க­லைக்­க­ழகத்தின் ஆய்­வா­ளர்­கள் அந்த ஆய்வை மேற்­கொண்­ட­னர். அது அமெ­ரிக்க மருத்­து­வச் சத்­து­ணவு சஞ்­சிகை ­யில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

வைட்­ட­மின் டி எலும்­பு­க­ளின் உறு­திக்­கும் எதிர்ப்­பு­சக்­திக்­கும் முக்­கி­யம் என்று பல­ரும் அறி­வோம். வைட்­ட­மின் டி குறை பாட்டுக்­கும் நீரி­ழிவு நோய், இத­யக் கோளாறு, மூச்­சுப் பிரச்­சி­னை­கள் போன்­ற­வற்­றுக்­கும் தொடர்பு உள்­ள­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

தற்­போது மற­தி­நோ­யை­யும் வாதநோயையும் இந்தப் ­பட்­டி­ய­லில் சேர்த்­துள்­ளது தென் ஆஸ்­தி­ரே­லி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆய்வு. பிரிட்­ட­னின் உயர் மருத்­துவத் -தர­வு­வங்­கி­யி­லி­ருந்து 295,000 பேரின் மர­ப­ணுக் கூறு­களும் அவர்­க­ளின் மூளை­யின் நரம்­ப­ணுப் படங்­களும் இதில் ஆரா­யப்­பட்­டன.

வைட்­ட­மின் டி குறை­வாக இருப்­ப­வர்­க­ளுக்கு மூளை­யின் அளவு சிறி­ய­தாக இருந்­தது ஆய்­வில் தெரியவந்­தது.

அத்­து­டன், மர­ப­ணுக் கூறு­களை ஆய்ந்து பார்த்­த­போது வைட்­ட­மின் டி குறை­பாடு மறதி­ நோய்க்கு கார­ண­மாக இருந்­த­தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதை உறு­திப்­ப­டுத்த கூடு­தல் ஆய்­வு­களை ஆய்­வா­ளர்­கள் திட்­ட­மிட்டு வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!