பழங்களின் அரசன் - டுரியான்

தெம்பனிஸ் சென்ட்ரல் புளோக் 503ல் டுரியான் பழத்தை வாங்க நிற்கும் மக்கள் கூட்டம்.

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்­களில் சிங்­கப்­பூ­ரில் அதி­கம் காணப்­படும் பழங்­களில் ஒன்று டுரி­யான். இதைப் பழங்­க­ளின் அர­சன் என்­றும் அழைப்­பார்­கள்.

அதி­க­மான சதைப்­பற்­று­டன் காணப்­படும் இந்­தப் பழத்­தின் மணம் பெரும்­பா­லா­ன­வர்

களுக்கு பிடிக்கும். ஒரு சில­ருக்கு அதன் மணம் பிடிக்­காது. அத்­த­கைய சிறப்பு மணம் இந்­தப் பழத்­திற்கு உண்டு. இந்த மணத்­தால் தெம்­ப­னிஸ் சென்ட்­ரல் விழாக்­கோ­லம் பூண்­டி­ருக்­கிறது.

புளோக் 503ல் இயங்­கும் பழக்­கடை 24 மணி நேர­மும் திறந்து இருப்­ப­தால் பகல், இரவு பாரா­மல் கூட்­டம் அலை­மோ­து­கிறது.

காலை­யில் சென்­றால் புது பழங்­க­ளா­க­வும் பெரி­தா­க­வும் இருக்­கும் என்­ப­தால் பலர் அதி­கா­லை­யி­லேயே வந்து விடு­கின்­ற­னர்.

சிலர் குடும்­ப­மாக வந்து பழங்­களை வாங்கி அதை வீட்­டிற்கு எடுத்­துச் சென்று உண்

பதற்கு காத்­தி­ருக்­கா­மல் அரு­கில் இருக்­கும் விளை­யாடு

மிடம், கூடா­ரம் ஆகி­ய­வற்­றில் வட்­ட­மாக அமர்ந்து ரசித்து, ருசித்து உண்­கின்­ற­னர்.

மலாய்க்­கா­ரர்­கள், தமி­ழர்­கள் குறை­வா­கவே வாங்­கு­கின்­ற­னர் என்­றும் இந்­தப் பழத்தை அதி­கம் விரும்பி, வாங்கி உண்­

ப­வர்­கள் சீனர்­கள்­தான் என்­றார் அங்கு உணவு உண்டு கொண்­டி­ருந்த திரு ராஜு.

டுரி­யான் பழங்­கள் தென் கிழக்கு ஆசிய நாடு­க­ளைத் தாய­க­மா­கக் கொண்­டவை. இந்­தப் பழம் சிறிய பலாப்

பழத்­தைப்­போல இருக்­கும்.

பலாப்­ப­ழத்­தின் வெளிப்

பகு­தி­யில் சிறிய முட்­கள் போன்று காணப்­படும். ஆனால் டுரி­யான் பழத்­தின் தோலில் கடி­ன­மான, கூர்­மை­யான முட்­கள் போன்று இருக்­கும்.

கவ­ன­மாக இதனை வெட்டி எடுத்­தால் உள்ளே பலாச்­சுளை போன்ற சதைப்­ப­குதி இருக்­கும். அதை அப்­ப­டியே உண்­ண­லாம்.

வெப்ப மண்­டல கனி

களான வாழை, பலா­போல டுரி­யான் பழ­மும் அதிக பலன்­களை உடை­யது.

டுரி­யான் பழத்­தில் கால்­சி­யம், மாங்­க­னீஸ், கரோட்­டின், கொழுப்பு, இரும்பு, கார்­போ­ஹைட்­ரேட், தாமி­ரம், ஃபோலிக் ஆசிட், வைட்­ட­மின் சி, நார்ச்­சத்து, துத்­த­நா­கம், நியா­சின், புர­தம், பாஸ்­ப­ரஸ், மக்­னீ­சி­யம் என பல சத்­து­கள் இருக்­கின்­றன.

மலே­சிய டுரி­யான் பழங்­களை சிங்­கப்­பூ­ரர்­கள் விரும்பி வாங்­கு­கின்­ற­னர்.

அண்­மை­கா­ல­மாக மலே­சி­யா­வில் இருந்து வரக்­கூ­டிய டுரி­யான் பழங்­க­ளில் சில வகைப் பழங்களின் விலை உயர்ந்­தி­ருப்­ப­தாக இந்­தப் பழத்தை வாங்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் குறை கூறி வரு­கின்­றனர்.

மலே­சியா மட்­டு­மல்­லா­மல், தாய்­லாந்து, பிலிப்­பீன்ஸ் நாடு­களில் இருந்­தும் சிங்­கப்­பூ­ருக்கு டுரி­யான் பழங்­கள் வருகின்றன.

இந்த ஆண்டு மலே­சிய டுரி­யான் பழங்­க­ளின் விலை 40 விழுக்­காடு அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது.

மற்ற நாடு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் டுரி­யான் பழங்­க­ளின் விலை குறை­வாக உள்ள போதி­லும் சிங்­கப்­பூர் மக்­கள் அவற்றை அதி­கம்

வாங்­கு­வ­தில்லை. கார­ணம், மலே­சிய டுரி­யான் பழங்­களில் காணப்­படும் சுவை மற்ற நாடு­களில் இருந்து வரும் பழங்­களில் இருப்­ப­தில்லை என்­கின்­ற­னர்.

அதன் கார­ண­மாக சிங்­கப்­பூரர்கள் பல­ரும் வாய்ப்பு கிடைக்­கும்­போது எல்லை கடந்து சென்று மலே­சி­யா­வின் எல்லை மாநி­ல­மான ஜோகூ­ரில் இருந்து டுரி­யான் பழங்­களை வாங்கி வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, கடந்த ஆண்டு 15 வெள்­ளிக்கு விற்­கப்­பட்ட ஒரு கிலோ மலே­சியா டுரி­யான் பழம், தற்­பொ­ழுது 25 வெள்­ளிக்கு விற்­கப்­ப­டுவது குறிப்பிடத்தக்கது.

டுரியான் என் மகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இதனை வாங்கினேன். தூக்கிச் செல்லும்போது இதன் முட்கள் காலைப் பதம் பார்க்கும். ஆனாலும் இதன் ருசி வலியை மறக்கச் செய்துவிடும். இதை வெட்டி இதன் சதையை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து உண்டால் அமிர்தம்போல இருக்கும்.

என் குடும்பத்தினர் அனைவரும் டுரியானை விரும்பி உண்போம். அதில் இருக்கும் சுவைக்கு எதுவுமே ஈடாகாது. அந்த மணம் ஒரு சிலருக்குப் பிடிக்காது. ஆனால் எனக்கு இந்த மணம் மிகவும் பிடிக்கும். சதைப்பற்றுடன் இருக்கும் இந்தப் பழத்தின்

ருசியோ ருசி.

தன்னுடைய மகளுக்காக டுரியானை வாங்கும் திருமதி கல்யாணி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!