பேறு காலத்தில் உண்ண வேண்டிய பழங்களும் காய்களும்

கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் அதன் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் தாய் உட்கொள்ளும் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தாய்க்கு மட்டுமல்லாது சேயின் வளர்ச்சியையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதால் ஆரோக்கியமற்ற அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான உண்பதைத் தவிர்த்து, சில மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

வாழைப்பழத்தில் பொட்டேசியம் அதி­கம் உள்­ளது. வைட்­ட­மின் பி6, வைட்­ட­மின் சி மற்­றும் நார்ச்­சத்­து­களும் உள்­ள­டங்­கி­யது. பேறு காலத்­தில் மலச்­சிக்­கல் ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­தது. இத்­த­கைய சூழ்­நி­லை­யில் அதிக நார்ச்­சத்து கொண்ட வாழைப்­ப­ழங்­க­ளைச் சாப்­பி­டு­வது உத­வி­யாக இருக்­கும். வைட்­ட­மின் பி6 குமட்­டல் மற்­றும்

வாந்­தியைக் கட்­டுப்­ப­டுத்­தும் தன்மை கொண்­டது. பேறு காலத்தின் ஆரம்ப நிலை­யில் இந்­தப்

பிரச்­சி­னை­கள் தலை­தூக்­கும்.

எலு­மிச்சை, நெல்­லிக்­காய், கிவி, அன்­னாசி, ஆரஞ்சு போன்ற

சிட்­ரஸ் பழங்­களில் வைட்­ட­மின் சி அதி­கம் உள்­ளது. கரு­வில் இருக்­கும் குழந்­தை­யின் எலும்பு வளர்ச்­சிக்கு வைட்­ட­மின் சி அவ­சி­யம். சிட்­ரஸ் பழங்­கள் கர்ப்­பி­ணிப் பெண்­ணின் செரி­மா­னத்தை மேம்­ப­டுத்­த­வும், பேறு காலத்தின் ஆரம்ப நாட்­களில் ஏற்­படும் உடல்

உபா­தை­களைப் போக்­க­வும் உத­வும்.

அவகாடோ பழத்­தில் அதிக 'போலேட்' உள்­ளது. வைட்­ட­மின் சி, பி, கே, நார்ச்­சத்து, மெக்­னீ­சி­யம் மற்­றும் பொட்டேசியம் போன்ற ஊட்­டச்­சத்­துகளும் அதி­கம் உள்­ளன. மேலும் அவகாடோ பழத்­தில் உள்ள பொட்டேசியம் பேறு காலத்­தில் காலில் ஏற்­படும் தசைப் பிடிப்­பு­களை கட்­டுப்­ப­டுத்த உத­வும். பொது­வாக பொட்டேசியம் மற்­றும் மெக்­னீ­சி­யம் குறை­பாடு கார­ண­மாக காலில் பிடிப்­பு­கள் ஏற்­ப­ட­லாம். இந்­தப் பழத்­தைச் சாப்­பிட்­டால் இந்த குறை­பாட்டை நீக்­கி­லாம். குமட்­ட­லும் நிற்­கும்.

நார்ச்­சத்­துள்ள ஆப்பிள் பழம் அதிக அளவு வைட்­ட­மின் சி கொண்­டுள்­ளது. வைட்­ட­மின் ஏ, பொட்டேசியம் மற்­றும் பெக்­டின் ஆகி­ய­வை­யும் உள்­ளன. பெக்­டின் என்­பது ஆப்­பி­ளில் காணப்­படும் ஒரு ப்ரீ­ப­யா­டிக் ஆகும். இது

குட­லில் நல்ல பாக்­டீ­ரி­யாக்­க­ளின் வளர்ச்­சியை

ஊக்­கு­விக்­கும். ஆப்­பி­ளில் இருக்­கும் அதிக சத்­துகளைப் பெறு­வ­தற்கு அதனை தோலு­டன் சாப்­பிட வேண்­டும்.

தர்­பூ­ச­ணி­யில் வைட்­ட­மின் ஏ, சி, பி6, மெக்­னீ­சி­யம், பொட்டேசியம் போன்ற வைட்­ட­மின்­கள் நிறைந்­துள்­ளன. மேலும் தாதுக்­களும் நார்ச்­சத்­து­களும் உள்­ளன. பேறு காலத்­தின் கடைசி மூன்று மாதங்­களில் ஏற்­படும் நெஞ்­செ­ரிச்­சல், கை, கால்­களில் உண்­டா­கும் வீக்­கம் போன்­ற­வற்றை தணிக்­கும் தன்மை தர்­பூ­ச­ணிக்கு உண்டு. தசைப்­

பி­டிப்­பு­க­ளை­யும் போக்க உத­வும்.

முட்­டைக்­கோஸ், கீரை உள்­ளிட்ட பச்சை இலைக் காய்­க­றி­களில் இருக்­கும் வைட்­ட­மின் ஏ, சி, கே, ஈ, கால்­சி­யம், இரும்பு, போலேட் மற்­றும் நார்ச்­சத்­து­கள், தாதுக்­கள் தாய், சேய் இரு­வ­ரின் தேவை­

க­ளைப் பூர்த்தி செய்­யும். இவற்­றுள் போலேட் மிக­வும் முக்­கி­ய­மான வைட்­ட­மின் ஆகும். இது பிறப்பு குறை­பா­டு­களைத் தடுக்­கக்­கூ­டி­யது.

உரு­ளைக்­கி­ழங்கு மற்­றும் சர்க்­கரை வள்­ளிக்­கி­ழங்கு இரண்­டி­லும் பல அத்­தி­யா­வ­சிய ஊட்டச்சத்துகள் உள்­ளன. குறிப்­பாக சர்க்­கரை

வள்­ளிக்­கி­ழங்­கில் அதிக அளவு வைட்­ட­மின் ஏ உள்­ளது. இது ரத்­தத்­தில் சர்க்­கரை அள­வைக் கட்­டுப்­ப­டுத்த உத­வும். பொட்டேசியம், மெக்­னீ­சி­யம், தாமி­ரம், இரும்பு,

வைட்­ட­மின் சி மற்­றும் பி போன்ற வைட்­ட­மின்­களும் அதில் உள்­ளன.

நீர்ச்­சத்து நிறைந்த காய்­க­றி­கள் கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு நன்மை பயக்­கும். வெள்­ள­ரி­யில் நீர்ச்­சத்து அதி­கம் உள்­ள­தால் இது கர்ப்­பி­ணிப் பெண்­க­ளி­டத்­தில் நீரி­ழப்பை தடுக்க உத­வும். பேறு காலத்­தில் ஏற்­படும் பொது­வான பிரச்­சி­னை­க­ளான மலச்­சிக்­கல் மற்­றும் மூல நோய் அபா­யத்­தைக் குறைக்­க­வும் வழி­வ­குக்­கும்.

தக்­கா­ளி­யில் வைட்­ட­மின் ஏ

மற்­றும் சி அதி­கம் உள்­ளது.

கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு

அவ­சிய தேவை­யான கார்­போ­ஹைட்­ரேட், நார்ச்­சத்து, போலிக் அமி­லம் மற்­றும் புர­தங்­கள் போன்ற ஊட்­டச்­சத்துகளையும் கொண்­டுள்­ளது. தக்­கா­ளியை பேறு காலத்­தில் சாப்­பி­டு­வது பாது­காப்­பா­னது. உட­லுக்கு பல ஆரோக்­கிய நன்­மை­

க­ளை­யும் வழங்­கக்­கூ­டி­யது. தக்­கா­ளியை அள­வோடு பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் அனைத்து ஆரோக்­கிய

நன்­மை­க­ளை­யும் அனு­ப­விக்க முடி­யும்.

கத்­த­ரிக்­கா­யும் பேறு காலத்­தில் சாப்­பி­டு­வ­தற்கு பாது­காப்­பா­னது. இருப்­பி­னும், அள­வோடு சாப்­பி­டு­வதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள். கத்­தி­ரிக்­காய் குழந்­தை­யின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சியை மேம்­ப­டுத்­தக்­கூ­டி­யது. ஏனெ­னில் இதில் வைட்­ட­மின் இ, ஏ போன்ற பல அத்­தி­யா­வ­சிய ஊட்டச்சத்துகளும் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!