தீயை அணைக்க ஒரு பந்து போதும்

தொழில்­நுட்­பங்­கள் வளர்ச்­சி­ அடைந்­து­கொண்டே இருந்தாலும் விபத்­து­கள் என்­பது நடந்­து­

கொண்­டு­தான் இருக்­கின்றன. இவற்­றில் பல இடங்­களில் தீ

விபத்­து­கள் என்­பது இன்­ற­ள­வில் தவிர்க்க இய­லாத ஒன்­றா­கி­

விட்­டது.

வீடு, அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு, வாகனம், அலு­வ­ல­கம் ஆகியவற்றில் தீ விபத்து என்று தின­மும் தீ தொடர்­பான செய்­தி­கள் வந்­து­கொண்­டு­தான் இருக்­கின்­றன.

தீ விபத்து ஏற்­பட்­ட­தும் அரு­கில் இருப்­ப­வர்­கள் என்ன செய்­வது என்று தெரி­யா­மல் பதற்­றப்­ப­டு­வார்­கள்.

இது­போன்ற சூழ்­நி­லை­யில் ஒரு நிறு­வ­னம் தீயை அணைக்க 'elide ball' என்ற பந்து போன்ற பொருள் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ளது.

1.3 கிலோ எடை­யுள்ள இந்த பந்­திற்­குள் தீயை அணைக்­கப் பயன்­படும் ரசா­யனக் கலவை நிரப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

வீடு, அலு­வ­ல­கம், வாகனம் ஆகி­ய­வற்­றில் இந்­தப் பந்தை முன்பே பொருத்தி வைத்­தி­ருந்­தால், தீயின் வெப்­பம் உணரும்போது பந்­தில் இருந்து வெளி­யே­றும்

ரசா­ய­னக் கல­வைத் தீயை

அணைத்­து­வி­டும்.

இந்தப் பந்து வைக்­காத இடத்­தில் தீ பிடித்­தால் பந்தைத் தூரத்­தில் நின்று நெருப்­பின் மீது வீசி எறிய வேண்­டும்.

நெருப்­பில் விழுந்த பந்­தின் மேலுறை நெருப்­பில் எரிந்­த­தும் உடனே பந்து உடைந்து அதில் இருந்து வெளி­யா­கும் ரசா­ய­னம் தீயை அணைத்­து,­

புகைமூட்டமாக்கி விடும்.

இந்தப் பந்து, நெருப்பு எரி­யும் இடத்­தில் மட்­டுமே வேலை செய்­யும்.

நெருப்பு இல்­லாத இடங்­க­ளி­லும் கீழே தவறி விழுந்­தா­லும் இது உடை­யாது. பாது­காப்­பா­னது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!