10 மாதங்களாக ஆற்றில் மூழ்கிக் கிடந்தும் இயங்கும் திறன்பேசி

10 மாதங்களாக ஆற்றில் மூழ்கிக் கிடந்தும் இயங்கும் திறன்பேசி

2 mins read
5e5ec978-b3d3-4479-abf5-c8cc857a44b1
2021 ஆகஸ்ட்டில் ஒவைன் டேவிஸ் என்ற இந்த பிரிட்டிஷ் ஆடவர் ஆற்றில் தவறவிட்ட ஐஃபோன் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. படம்: மிகெல் பாச்செக்கோ/ஒவைன் டேவிஸ் -

லண்­டன்: பத்து மாதங்­க­ளுக்கு முன் பட­கோட்­டம் மேற்­கொண்­ட­போது ஆற்­றில் திறன்­பே­சி­யைத் தவ­ற­விட்ட ஆட­வர், செயல்­பாட்டு நிலை­யில் அது திரும்­பக் கிடைத்­த­தைத் தம்­மால் நம்­பவே முடி­ய­வில்லை என்­றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்­கி­லாந்­தின் குளோஸ்­ட­ரில் உள்ள ரை ஆற்­றில் பட­கோட்­டம் மேற்­கொண்­ட­போது, ஒவைன் டேவிஸ் (படம்) என்ற இந்த ஆட­வரின் ஐஃபோன் கைந­ழுவி ஆற்­றில் விழுந்­து­விட்­டது.

இந்­நி­லை­யில், இம்­மா­தத் தொடக்­கத்­தில் தமது குடும்­பத்­து­டன் அந்த ஆற்­றில் பட­கோட்­டம் மேற்­கொண்ட மிகெல் பாச்­செக்கோ எனும் ஆட­வர், டேவி­சின் திறன்­பே­சி­யைக் கண்­டு எ­டுத்­தார்.

வீடு திரும்­பி­ய­பின் அத­னைக் காய­வைத்த திரு மிகெல், அந்­தத் திறன்­பே­சி­யின் உரி­மை­யா­ள­ரைக் கண்­டு­பி­டிக்­கும் நோக்­கில் இணை­யத்­தில் அது­கு­றித்த படங்­க­ளைப் பதி­விட்­டார்.

"முழுக்­க­வும் நீராக இருந்­த­தால் அது இயங்­கும் என்று நான் நினைக்­க­வில்லை," என்­றார் திரு மிகெல்.

பல முக்­கி­யத் தக­வல்­களும் படங்­களும் இருக்­க­லாம் என்­ப­தால் அத்­தி­றன்­பே­சியை உலர்த்த தாம் பெரு­மு­யற்சி எடுத்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"எனது திறன்­பேசி தொலைந்து­போ­னால் நான் எந்த மன­நி­லை­யில் இருப்­பேன் என்­பதை அறி­வேன். அதில் என் குழந்­தை­களின் பல படங்­கள் உள்ளன. அத­னால், எப்­ப­டி­யும் அது திரும்­பக் கிடைக்­கவே விரும்­பு­வேன்," என்­றார் திரு மிகெல்.

உலர்த்­திய திறன்­பே­சி­யைக் காலை­யில் மின்­னூட்­டி­யு­டன் இணைத்­த­போது தம்­மால் நம்­பவே முடி­ய­வில்லை என்­றார் அவர்.

திறன்­பே­சி­யின் முகப்­புத்­தி­ரை­யில் 13 ஆகஸ்ட் என்ற தேதி­யுடன் ஓர் ஆணும் பெண்­ணும் இணைந்து நிற்­கும் படம் தோன்­றி­யது. தி­றன்­பேசி ஆற்றில் விழுந்­ததும் அதே நாளில்தான்.

அத­னைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் குழுப்­பக்­கம் ஒன்­றின் வழி­யாக அப்­ப­டங்­க­ளைத் திரு மிகெல் பதி­விட்­டார். அவை 4,000க்கும் மேற்­பட்ட முறை பகிர்ந்து­கொள்­ளப்­பட்­டன.

திறன்­பே­சிக்கு உரி­ய­வ­ரான ஒவைன் டேவிஸ் ஆறு மாதங்­களா­கச் சமூக ஊட­கங்­கள் பக்கம் தலைகாட்டாதபோதும், அவ­ரது மற்­றும் அவ­ரு­டைய காதலி ஃபியோனா கார்ட்­ன­ரின் நண்­பர்­கள் அத­னைக் கண்­டு­கொண்­டனர்.

"அந்த நாளில் இரு­வர் மட்­டும் செல்­லக்­கூ­டிய பட­கில் நானும் என் காத­லி­யும் சென்­றோம். அப்­போது, என் காதலி எழுந்து நின்­ற­தால் நிலை தடு­மாறி இரு­வ­ரும் ஆற்­றுக்­குள் விழுந்­து­விட்­டோம். எனது காற்­சட்­டை­யின் பின்­பு­றம் வைத்­தி­ருந்த திறன்­பே­சி­யும் நீரில் விழுந்­து­விட்­டது," என்று நிகழ்ந்­ததை விவ­ரித்­தார் திரு டேவிஸ்.

திறன்­பே­சியை ஒப்­ப­டைக்க திரு மிகெல் எடுத்த பெரு­மு­யற்­சி­யால் தாம் ஈர்க்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் சொன்னார்.