‘ஏடிஎச்டி’ குறைபாடு பற்றிய முதல் தமிழ் நுண்தளம் அறிமுகம்

மோன­லிசா

கவ­னக்­குறை மிகைச்­சு­றுதி குறை­பாடு (Attention Deficit Hyperactivity Disorder - ADHD) எனப்­படும் கவ­னச்­சி­த­றல் மற்­றும் அள­வுக்கு அதி­க­மான செய­லாக்க குறை­பாட்­டி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக ஒரு சிறப்பு நுண்­த­ளத்தை (microsite) 'அன்­லாக்­கிங் ஏடி­எச்டி (Unlocking ADHD)' தொண்டு நிறு­வ­னம் நாளை மறு­நாள் வெள்ளிக்­கி­ழமை, ஜூலை ஒன்­றாம் தேதி வெளி­யி­ட­வி­ருக்­கிறது.

தமி­ழில் வெளி­யி­டப்­படும் இந்த நுண்­தளத்­தில் 'ஏடி­எச்டி'க்கான அறி­கு­றி­கள், அக்­கு­றை­பாட்­டைச் சரி­செய்ய உத­வும் வழி­மு­றை­கள், தக்க சிகிச்சை முறை­கள் போன்ற பல பய­னுள்ள தக­வல்­கள் இடம்­பெ­றும்.

ஜூலை ஒன்­றாம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை 'ஸூம்' செயலி வழி­யாக நடக்­க­வி­ருக்­கும் இந்­நி­கழ்­வில் 'ஏடி­எச்டி - கண்­ட­றி­தல் மற்­றும் சமா­ளித்­தல்' எனும் கருத்­த­ரங்­கும் இடம்­பெ­றும்.

'ஏடி­எச்டி' குறை­பாடு இருப்­பதை மருத்­து­வர் மூலம் கண்­ட­றி­வ­தன் அவ­சி­யம், பர­வலான அறி­கு­றி­கள், அதனை அறி­யா­மல் இருப்­ப­தன் விளை­வு­கள் பற்றி இக்­க­ருத்­தரங்­கில் கலந்­து­ரை­யா­டப்­படும்.

இக்­க­ருத்­த­ரங்­கில் உள­வி­யல் வல்­லு­நர் எஸ்.சி.அன்­ப­ரசு, 'ஏடி­எச்டி'யை எதிர்­கொள்­ளும் பிள்­ளைக்­குத் தாயான திரு­வாட்டி உமா முத்­தை­யன், 'ஏடி­எச்டி'யை எதிர்­கொள்­ளும் தொண்­டூ­ழி­யர் பாஹியா பஷீர் ஆகி­யோர் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

இணை விரி­வு­ரை­யா­ள­ரான ஜெட் செந்­தில் இக்­க­ருத்­த­ரங்கை வழி­ந­டத்­த­வி­ருக்­கிறார்.

அத்­து­டன், மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சே­ரி­யின் சிறப்பு உரை­யும் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­நி­கழ்­வில் கலந்­து­கொள்ள பின்­வ­ரும் இணை­யத்­தள முக­வ­ரி­யில் பதிவு செய்­ய­லாம்: https://bit.ly/adhdtamil

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!