பாதங்கள் பத்திரம் பெண்ணே!

பாதங்கள் பத்திரம் பெண்ணே!

3 mins read
f6de279d-a2a4-45eb-9996-c2f85ee75365
-

மொட்டுப்போல மலரும் முகம். மெட்டியால் மெட்டமைத்து சலங்கைகளால் கீதம் பாடும் பாதங்கள். இரண்டுமே பெண்ணின் பேரழகு மந்திரங்கள். பெண்கள் முக அழகிற்குக் காட்டும் அதே அக்கறையைப் பாதங்களைப் பராமரிப்பதிலும் காட்டவேண்டும்.

ஏன் தேவை?

பட்­டுப்­போன்ற பாதங்­கள் நம் ஆரோக்­கி­யத்­தின் அள­வு­கோல். உடல் உறுப்­பு­களை இணைக்­கும் வர்ம முடிச்­சு­கள் அத்­த­னை­யும் பாதங்­களில் முடி­கின்­றன. பாதங்­களை ஆரோக்­கி­ய­மா­கப் பரா­ம­ரிப்­பது, மொத்த உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் பராமரிப்பதற்கு சமம்.

முகத்தை அழ­காக வைத்­தி­ருக்­கும் பல பெண்­கள் பாதங்­கள் பரா­

ம­ரிப்­பில் கவ­னம் செலுத்­து­

வ­தில்லை. வெளி­யில் சொல்­லா­

விட்­டா­லும் இது அவர்­க­ளின்

தன்­னம்­பிக்­கையைப் பாதிக்­கும்.

பாத வெடிப்­பிற்­குக் கார­ணம்

வெளியே செல்­லும்­போது பாதங்­களில் அழுக்­குப் படி­கிறது. மேலும் போதிய அளவு தண்­ணீர் குடிக்­கா­த­தால் பாதங்­கள் வறண்டு வெடிப்­பு­கள் உண்­டா­கின்­றன. பாத வெடிப்­பு­க­ளைக் கவ­னிக்­கா­மல் விடு­வ­தால் உடை உடுத்­தும்­போது சங்­க­ட­மாகவும் வெடிப்புகளால் கடுமையான வலியையும் ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தைக் கொடுக்கும். பாதங்­கள் பரா­ம­ரிப்­பில் அழகு, ஆரோக்­கி­யம் இரண்­டுமே இணைந்­துள்­ளன.

தின­மும் கடைப்­பி­டிக்க

வேண்­டி­யவை:

பாதங்­கள் பளிச்­சிட அன்­றாட வாழ்க்கை முறை­யில் சில­வற்­றைச் செய்­ய­லாம். காலை­யில் எழுந்­த­தும் குளிர்்ந்த நீரால் காலை கழு­வ­வேண்­டும். வெறும் காலில் நடக்­கும்­போது அழுக்­கும் ஈர­மும் படா­மல் இருக்க மென்­மை­யான

கால­ணி­களை அணி­ய­லாம். குளித்­த­பின் ஈரப்­ப­தம் உள்ள கிரீம்­களை தட­வ­லாம். வாரம் ஒரு முறை நம்­மு­டைய பாதத்­திற்கு நாமே எண்­ணெய் தடவி மெது­வாக 'மசாஜ்' செய்­ய­லாம். இது வலி­யைப் போக்கி, பாதங்­க­ளுக்­குப் பொலி­வூட்­டும்.

மாதம் ஒரு­முறை 'பெடிக்­கி­யூர்'

பாத­வெ­டிப்பு, கால் ஆணி, கால் நரம்பு சுருட்­டிக்­கொள்­ளு­தல் மற்­றும் கணுக்­கால் வலி உள்­ள­வர்­கள் மாதம் ஒரு முறை 'பெடிக்­கி­யூர்' செய்­து­கொள்­வது நல்­லது. முழங்­கால் முதல் பாதம் வரை 'மசாஜ்' செய்­ய­வேண்­டும். 'பெடிக்­கி­யூர்' செய்­யும்­போது இறந்த செல்­கள் இயற்­கை­யான முறை­யில் அகற்­றப்­பட்டு, பாதங்­கள் மென்­மை­யா­கும். இத­னால் காலில் ஆணி வரு­வது குறை­யும். மேலும் பாத எரிச்­சல் மற்­றும் வலி­யில் இருந்­தும்

நிவா­ர­ணம் கிடைக்­கும்.

பாத நரம்­பு­கள் பாதிக்­கப்­பட்டு இருந்­தா­லும் 'பெடிக்­கி­யூர்' செய்­

வ­தன் மூலம் பாத நரம்­பு­க­ளின் ஆரோக்­கி­யத்­தைப் பாது­காக்­க­லாம்.

'பெடிக்­கி­யூர்' செய்­வ­தால் பாதங்­களில் ரத்த ஓட்­டம் சீரா­கிறது. பாதங்­க­ளின் 'மசாஜ்' செய்­யும்­போது உடல் உறுப்­பு­க­ளின் மர்ம முடிச்­சு­களை நீவி­வி­டு­வ­தால் உடல் உறுப்­பு­களும் நல்ல ரத்த ஓட்­டத்­தைப் பெறும்.

நம் உட­லின் மொத்த எடை­யை­யும் பாதங்­களே தாங்­கு­கின்­றன. இத­னால் பாதங்­களை வெடிப்பு களின்றி பாது­காப்­பது மிக­வும் அவ­சி­யம். பாதங்­க­ளின் வழி­யாக கிரு­மித்­ தொற்று ஏற்­ப­டு­வ­தை­யும் இதன்­மூ­லம் தடுக்­க­லாம்.

பாதங்­க­ளுக்கு அழ­கூட்ட

பாதத்­தில் ரத்த ஓட்­டத்தை அதி­க­ரிக்க பாதங்­களை உயர்த்­து­வது, நடப்­பது என உடற்­ப­யிற்­சி­கள் செய்­ய­லாம்.

வீட்­டில் தொலைக்­காட்சி பார்க்­கும்­போ­து­ வெது­வெ­துப்­பாக சுட வைத்த எண்­ணெய் தடவி 'மசாஜ்' செய்­த­படி பார்க்­க­லாம்.

வெது­வெ­துப்­பான நீரில் சிறிது கல் உப்­பு­டன் எலு­மிச்­சைச் சாறைக் கலந்து அதில் கால்­களை நனைத்­த­படி உட்­கார்ந்­தி­ருக்­க­லாம்.

வாரத்­திற்கு இரண்டு முறை எலு­மிச்­சைத் தோலை பாதங்­களில் தேய்த்து சில

நிமி­டங்­கள் ஊற­விட்டு பின் கழு­வ­லாம். அத­னால் நகங்­க­ளுக்கு இடையே இருக்­கும் அழுக்கு நீங்கும். பாதங்­களும் நகங்­களும் பளிச்­சி­டும்.

பாதத்­தில் வெடிப்பு உள்­ள­வர்­கள் வீட்­டில் மரு­தாணி இலையை

விழு­து­போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்­களில் வாரந்­தோ­றும் தடவி வந்­தால் வெடிப்பு நீங்­கும்.

உரு­ளைக்கி­ழங்கைச் சிறு

துண்­டு­க­ளாக வெட்டி, காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்­ணீ­ரில் குழைத்து பூசி வர வெடிப்­பி­னால் ஏற்­பட்ட கருமை நீங்கி பாதம் மின்­னும்.

தின­மும் குளிக்­கும்­போது பாதத்தை நன்­றாக 5 நிமி­டம் தேய்த்து பிடித்து விட்­டாலே பாதங்­கள் மிரு­து­வாகி விடும்.

அழ­குப் பாதங்­க­ளால் உங்­க­ளின் தன்­னம்­பிக்கை மேம்­படும். பெண்­களே பாதங்­க­ளைப் பத்­தி­ர­மாக பார்த்­துக்­கொள்­ளுங்­கள்.