இடை சிறுத்து சிக்கென இருக்கும் கொரியர்கள்

இடை சிறுத்து சிக்கென இருக்கும் கொரியர்கள்

3 mins read
c21047d5-543f-43df-b4a7-bcaf1679b5de
-

தற்­பொ­ழுது பல இனத்­த­வர்­களும் விரும்­பிப் பார்க்­கும் படங்­களில்

முக்­கி­ய­மா­னது கொரி­யப் படங்­கள். அதற்­குக் கார­ணம் அவர்­கள் எடுக்­கும் படங்­க­ளின் தர­மும் அதில் நடிக்­கும் நடி­கர்­க­ளும்­தான்.

பளீச்­சென்ற சரு­மம், பட்­டு­போன்ற தலை­முடி மட்­டு­மல்ல அள­வான உட­ல­மைப்­பி­லும் கொரிய மக்­கள் கவ­னம் ஈர்க்க கூடி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். இந்­தி­யர்­க­ளைப் போலவே கொரி­யர்­களும் பாரம்­ப­ரிய உணவு வகை­களை விரும்பி உண்­ணக்­கூ­டி­ய­வர்­கள்.

கொரி­யர்­கள் தங்­கள் உணவு

மற்­றும் அவர்­கள் உண்­ணும் உண­வில் உள்ள சத்­துக்­களில் அதிக கவ­னம் செலுத்­து­கி­றார்­கள். ஆச்­ச­ரி­யம் என்­ன­வென்­றால், உடல் எடையை குறைக்க அல்­லது ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்து வதற்­கான திட்­ட­மிட்ட உண­வாக

இல்­லா­மல், அவர்­க­ளது அன்­றாட

உண­வின் அங்­க­மா­கவே மாறி­யுள்­ளது.

கொரி­யர்­கள் தங்­க­ளது அன்­றாட உண­வில் கடல் மற்­றும் இறைச்சி உணவு வகை­கள், காய்­க­றி­கள், புளிக்க வைக்­கப்­பட்ட உணவு வகை­கள் ஆகி­ய­வற்றை சேர்த்­துக்கொள்­கின்­ற­னர்.

உண­வில் நிறைய காய்­க­றி­கள்:

காய்­க­றி­களில் என்ன ஊட்­டச்­சத்­துக்­கள் உள்­ளன? அத­னைத் தினந்

தோறும் உண­வில் எடுத்­துக்­கொள்

வதால் நமக்கு என்ன மாதி­ரி­யான நன்­மை­கள் கிடைக்­கும் போன்­ற­வற்றை நாம் அனை­வ­ரும் நன்கு அறி­வோம். அது­போல கொரி­யர்­களும் தங்­க­ளது உண­வில், முள்­ளங்கி, மூங்­கில் கிழங்கு, கிழங்கு வகை­கள் போன்ற பல­வ­கை­யான காய்­க­றி­களை அன்­றாட உண­வில் சேர்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

இத­னால் காய்­க­றி­களில் இருந்து தேவை­யான ஊட்­டச்­சத்­து­களை பெறு­வ­தோடு, எடை­யை­யும் சீராக பரா­ம­ரிக்­கின்­ற­னர். ஏனெ­னில் கூடு­த­லாக, நீங்­கள் எவ்­வ­ளவு காய்­க­றி­களை சாப்­பி­டு­கி­றீர்­களோ, அவ்­வ­ளவு ஆரோக்­கி­ய­மா­க­வும் எடை குறை­வா­க­வும் இருப்­பீர்­கள்.

புளிக்­க­வைப்­பட்ட உணவு

வகை­க­ளின் பலன்­கள்:

புளிக்­க­வைக்­கப்­பட்ட உணவு வகை­கள் கொரி­யர்­க­ளி­டையே பிர­ப­ல­மாக

உள்­ளன. இது தற்­பொ­ழுது பல­ரி­ட­மும் பிர­ப­ல­மாகி வரு­கிறது. 'கிம்ச்சி'

கொரி­யா­வில் மிக­வும் பிர­ப­ல­மான புளித்த உண­வு­களில் ஒன்­றா­கும்.

'கிம்ச்சி' முட்­டைகோஸ், முள்­ளங்கி, பச்சை வெங்­கா­யம், உப்பு, சர்க்­கரை, இஞ்சி, பூண்டு மற்­றும் மிள­காய் போன்ற பல்­வேறு சுவை­யூட்­டல்­க­ளு­டன் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இதை எந்த உண­வு­

ட­னும் சேர்த்து உண்­ண­லாம். மேலும் இதில் குட­லின் ஆரோக்கியத்தை மேம்­

ப­டுத்­தும் புரோ­ப­யா­டிக்­கின் நன்­மை­கள் இருப்­ப­தாக கூறப்படு­கிறது.

கடல் உணவு வகை­கள்:

கடல் உணவு வகை­கள் புர­தத்­தின் ஆரோக்­கி­ய­மான ஆதா­ரங்­கள். இதில் குறைந்த அளவு கெட்ட கொழுப்பு உள்­ளது. சால்­மன், டியூனா மற்­றும் மத்தி போன்ற சில மீன்­களில் ஒமேகா - 3 கொழுப்பு அமி­லங்­கள் நிறைந்­துள்­ளன.

கடல் உணவு வகை­க­ளைப் பொறுத்­த­வரை, அவை மிக­வும் ஆரோக்­கி­ய­மா­னவை மற்­றும் எடை குறைப்­புக்கு ஏற்­றவை,

பெரும்­பா­லான கொரி­யர்­கள் எடை­யைப் பரா­ம­ரிக்க அவர்­கள் தேர்வு செய்­யும் கடல் உண­வு­களும் ஒரு கார­ண­மாக அமை­கிறது.

பதப்­ப­டுத்­தப்­பட்ட மற்­றும் இனிப்­பு­கள் பல்­வேறு நாடு­களில் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு வகை­களை உண்பதால் உடல் எடை அதி­க­ரிக்க முக்­கிய கார­ண­மாக உள்ள நிலை­யில், கொரி­யர்­கள் பதப்­ப­டுத்­தப்­பட்ட, துரித உண­வு­ வகைகளைக் குறை­வாக எடுத்­துக்­கொள்­வ­தும்

சர்க்­க­ரை­யால் செய்­யப்­பட்ட இனிப்பு மற்­றும் பானங்­களை தவிர்ப்­ப­தும் அவர்­க­ளின் எடை கூடா­மல் இருக்க முக்­கி­யக் கார­ணங்­க­ளா­கும்.

பெரும்பாலும் கொரி­யர்­கள், வீட்­டில்­தயா­ரிக்­கப்பட்ட உண­வையே விரும்பி உண்கின்றனர்.

முட்­டைகோஸ், முள்­ளங்கி, பச்சை வெங்­கா­யம், உப்பு, சர்க்­கரை, இஞ்சி, பூண்டு மற்­றும் மிள­காய் போன்ற பல்­வேறு சுவை­யூட்­டல்­க­ளு­டன் தயா­ரிக்­கப்­ப­டு­ம் 'கிம்ச்சி'.