வெண்டைக்காய் மோர் குழம்பு 10 நிமிடத்தில் செய்யலாம்.
தேவையான பொருள்கள்:
வெண்டைக்காய் - 3, தேங்காய் - கால் கப், சீரகம் - அரைத் தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி, பூண்டு - 3 பல், இஞ்சி - அரைத் துண்டு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 4, கருவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு -அரைத் தேக்கரண்டி, எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயில் உப்பு போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். அடுத்து பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, மஞ்சள் பொடி, தேங்காய் ஆகியவற்றை மைய அரைக்கவும். பின் தயிரில் உப்பு போட்டு நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதினை கலந்துவிட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவேண்டும். பின் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தாளித்து வதக்கிய வெண்டைக்காயைப் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இறுதியாக தயிரை அதில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கும்போது, அடுப்பை அணைத்தால் வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

