சமந்தாவின் உடையலங்காரத்தைப் பார்ப்பதற்காகவே ஏராளமான பெண்கள் அவரைப் பின்பற்றி வருகின்றனர். புடவையில் ஆரம்பித்து நாகரிக உடை வரை விதவிதமாக நாகரிக உடைகளில் வலம் வந்து பதின்ம வயது பெண்களைத் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் சமந்தா.
திரைத்துறையைப் பொறுத்தவரை இணையத் தொடர், சினிமா என முன்னணி நட்சத்திரமாக விளங்கும் சமந்தா, வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக அவ்வப்போது படப்பிடிப்பு நடத்தி தனது படங்களை வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவரின் உடை, முடியலங்காரம், ஒப்பனை ஆகியவற்றைப் பார்க்க அவரின் ரசிகைகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அண்மையில் சமந்தா வெள்ளை நிற புடவையில் கறுப்பு கோடுகள் போட்ட புடவை ஒன்றை அணிந்து அதைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதைப் பார்த்த அவரின் ரசிகைகள் "இந்தப் புடவை என்ன விலை?" என்று இணையத்தில் தேடலை ஆரம்பித்துள்ளனர்.
அப்படி ஆவலுடன் சமந்தாவின் புடவை விலையை அறிந்துகொள்ள நினைத்தவர்களுக்கு அந்தப் புடவையின் வடிவமைப்பாளர் ப்ரீதம் ஜுகல்கர் பதிலிட்டு இருக்கிறார்.
"அந்தப் புடவையின் மேற்பரப்பைப் பட்டு துணியால் சமந்தாவிற்காகவே தனிப்பட்ட முறையில் நெய்ததாகவும் புடவையின் விலை 32,800 ரூபாய்," என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
இதுபோன்ற புடவை தங்களுக்கும் வேண்டும் பலர் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

