மனமுடைந்து போவதாலும் மரணம் நேரலாம்

மன­முடைந்து போகும் ஒரு­வர் இறப்­பது என்­பது ஒரு சோக­மான காதல் கதை போன்று தோன்­ற­லாம். ஆனால் அவ்­வாறு மரணம் நிகழ்வதும் சாத்தியமே.

அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வின் டெக்­சஸ் மாநி­லத்­தில் நடந்த துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்­தில் 19 பிள்­ளை­க­ளு­டன் இரண்டு ஆசி­ரி­யர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். அந்த ஆசி­ரி­யர்­களில் ஒரு­வ­ரான 48 வயது இர்மா கார்­சியா என்­ப­வ­ரின் கண­வர் திரு ஜோ கார்­சியா, 50, தம் மனை­விக்­கான இறு­திச் சடங்கு வேலை­க­ளைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது மார­டைப்பு ஏற்­பட்டு உயி­ரி­ழந்­தார்.

"ஜோ மன­மு­டைந்து போன­தால்­தான் இறந்­தார் என்று நான் நம்பு­கி­றேன். 25 ஆண்­டு­க­ளுக்கு மேல் தம் மனைவி மீது உயி­ரையே வைத்­தி­ருந்த அவர், சோகம் தாங்காமல் இறந்தார்," என்­று உறவினர் ஒருவர் கூறினார்.

எதனால் இது ஏற்படுகிறது?

ஏதே­னும் ஒரு துய­ரச் சம்­ப­வம் நேர்ந்­தால் உட­லில் மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஹார்­மோன்­கள், குறிப்­பாக ரத்த ஓட்­டத்­தை­யும் மூச்சு விடு­வ­தை­யும் துரி­த­மாக்­கும் 'அட்­ரெ­ன­லின்' (adrenaline) ஹார்­மோன் அதி­கரித்­து­வி­டும். இத­னால் இத­யத் தசை­கள் பல­வீ­ன­மா­வ­து­டன் மார­டைப்­பும் ஏற்­ப­ட­லாம்.

இதையே 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' (broken heart syndrome) என்­பர்.

மன அழுத்­தத்­தைத் தரக்­கூ­டிய ஒரு சம்­ப­வம் நிக­ழும்­போது அதைத் தாங்­கிக்­கொள்­ளும் வகை­யில் ஒரு­வரது உட­லில் அதி­க­மான அட்­ரெ­ன­லின் உரு­வா­கும்.

இருப்­பி­னும், அள­வுக்கு அதி­க­மான அட்­ரெ­ன­லின் உரு­வா­கும்­போது இத­யத்­திற்கு ரத்­தத்தை விநி­யோ­கிக்­கும் சிறிய தம­னி­கள் குறு­கி­­வி­டும். இத­னால் இத­யத்­திற்­குச் செல்­லும் ரத்த ஓட்­டம் தற்­கா­லி­க­மா­கக் குறைந்­து­விடும் என்று கிள­னி­கல்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் மூத்த மருத்துவ ஆலோ­ச­க­ரும் இத­ய­நோய் நிபு­ணரு­மான டாக்­டர் ரோஹித் குரானா விளக்­கி­னார்.

இத­யச் செயல்­பாட்டை முடக்கி மர­ணம் ஏற்­படும் அபா­யத்தை இந்த 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' ஏற்­படுத்­தி­வி­ட­லாம் என்று தேசிய பல்­க­லைக்­க­ழக இதய நிலை­யத்­தின் மூத்த ஆலோ­ச­க­ரும் இத­ய­நோய் நிபு­ண­ரு­மான பேரா­சி­ரி­யர் டான் ஹுவே சீம் கூறி­னார்.

சிங்கப்பூரில் பதிவாகும் சம்பவங்கள்

கடந்த பத்து, இரு­பது ஆண்டு­களாகத்­தான் சிங்­கப்­பூர் இதை ஒரு நோயா­கக் கரு­து­கிறது என்­றும் அவர் சொன்­னார்.

தேசிய பல்­க­லைக்­கழக மருத்­து­வ­மனை­யில் முதன்­மு­த­லில் 2005ஆம் ஆண்­டில் இது­போன்ற ஒரு சம்­ப­வம் பதி­வா­கி­யது என்­றும் ஆண்­டுக்­குச் சுமார் 600 மார­டைப்­புச் சம்­ப­வங்­கள் பதிவானால் 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' கார­ணத்­தால் நேர்பவை இரண்டு, மூன்று சம்­ப­வங்­கள் என்­றும் அவர் பகிர்ந்து­கொண்­டார்.

நெருக்­க­மான ஓர் உற­வின் மர­ணம், கடு­மை­யான வாக்­கு­வா­தம், தீரா அச்­சம், அதிர்ச்சி, அடக்க முடி­யாத ஆத்­தி­ரம் போன்ற சூழல்­களில் ஒரு­வ­ருக்கு 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' ஏற்­ப­ட­லாம்.

மோச­டி­யில் பணத்தை இழந்­த­வர், குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் குரைக்­கும் நாயால் பயந்­த­வர், கண்­புரை அறுவை சிகிச்­சைக்கு அஞ்­சி­ய­வர் போன்­றோ­ருக்கு இந்­தப் பிரச்­சினை ஏற்­பட்­டது என்­று நினைவுகூர்ந்தார் பேரா­சி­ரி­யர் டான். மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களும் இந்­தப் பிரச்­சி­னைக்கு இட்­டுச் செல்­ல­லாம். லாட்­ட­ரி­யில் பணம் வெல்­வது, பிடித்­த­மான விளை­யாட்­டுக் குழு­வுக்கு வெற்றி கிட்­டு­வது போன்ற சூழல்­க­ளி­லும் ஒரு­வ­ருக்கு 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' ஏற்­ப­ட­லாம்.

நடுத்தர வயது மாதருக்கு ஏற்படும் அபாயம் அதிகம்

ஆண்­கள், பிள்­ளை­க­ளுக்­கும் இந்­தப் பிரச்­சினை ஏற்­ப­ட­லாம் என்­றாலும் நடுத்­தர வய­து­டைய மாதரே அதிக அபா­யத்­தில் உள்­ள­தாக பேரா­சி­ரி­யர் டான் குறிப்­பிட்­டார்.

கடந்த அக்­டோ­ப­ரில் அமெ­ரிக்க இத­ய­வி­யல் இத­ழில் வெளி­யி­டப்­பட்ட ஆய்வு ஒன்­றின்­படி 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' தொடர்­பில் பதி­வான சம்­ப­வங்­களில் பெண்­கள் தொடர்­பா­னவை 88% என்­றும் அவர்­கள் குறிப்­பாக 50 வய­துக்­கும் 74 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­றும் கண்­ட­றி­யப்­பட்­டது.

இந்­தி­யா­வில் தனி­யாக வாழ்ந்து வந்த 80 வயது மாது ஒரு­வ­ருக்கு அண்­மை­யில் இந்த 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' இருந்­ததை உறு­திப்­ப­டுத்­தி­யது குறித்து டாக்­டர் குரானா பகிர்ந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் தம் குடும்­பத்­தா­ரைக் காண்­ப­தற்­காக அந்த மாது தனி­யா­கப் பய­ணம் செய்ய வேண்­டிய சூழல். இத­னால் அவ­ருக்­குப் பதற்­றம் அதி­க­ரித்­து­விட்­டது. சிங்­கப்­பூ­ருக்கு வரும் விமா­னத்­தில் என்ன செய்­கி­றோம் என்று தெரி­யா­மல் விமா­னத்தை மீண்­டும் இந்­தி­யா­வுக்­குத் திருப்­பு­மாறு விமா­னப் பணி­யா­ளர்­க­ளி­டம் அவர் கேட்­கத் தொடங்­கி­விட்­ட­தாக டாக்­டர் குரானா தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் வந்­த­தும் மருத்­து­வ­மனை­யின் அவ­ச­ரப் பிரி­வில் அவர் சேர்க்­கப்­பட்­டார். கடு­மை­யான நெஞ்சு வலி, மூச்­சுத் திண­றல், வியர்வை என இருந்த அவ­ரைச் சோதித்­துப் பார்த்­த­தில் அவ­ரின் பய­ணம் கார­ணத்­தால் அவ­ருக்கு ஒரு­வி­தத் துன்­பம் ஏற்­பட்­டுள்­ளது எனக் கண்­ட­றி­யப்­பட்­டது. அவ­ருக்கு நேர்ந்­தது 'புரோக்­கன் ஹார்ட் சிண்ட்­ரம்' என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மருந்தும் நிவாரணமும்

பொது­வாக இந்­தப் பிரச்­சி­னை­யுடன் வரும் நோயா­ளி­க­ளுக்கு உயர் ரத்த அழுத்­தத்­தைக் குறைக்­க­வும் இத­யத் துடிப்பை மெது­வ­டை­யச் செய்­ய­வும் அட்­ரெ­ன­லின் மற்­றும் இதர மன அழுத்த ஹார்­மோன்­களின் தாக்­கத்தை மட்­டுப்­ப­டுத்­த­வும் மருந்து தரப்­படும். இரண்டு முதல் நான்கு வாரங்­களில் நோயாளி­கள் குண­ம­டைந்­து­வி­டு­வர் என்­றார் பேரா­சி­ரி­யர் டான்.

மன­திற்கு அழுத்­தம் தரக்­கூ­டிய நிலை­யைத் தவிர்ப்­ப­தற்கு உடற்பயிற்சி, தியா­னப் பயிற்சி, மூச்­சுப் பயிற்சி போன்­ற­வற்றை மேற்­கொள்­ள­லாம். முடிந்­த­வரை உங்­களுக்­குள் விரும்­பத்­த­காத உணர்ச்­சி­களை எழுப்­பும் நபர்­க­ளையோ சூழல்­க­ளையோ தவிர்த்­து­வி­டுங்­கள் என்று அறி­வு­றுத்­து­கி­றார் டாக்­டர் குரானா.

செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!