70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'பாஸ்கரீயம்'

70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 'பாஸ்கரீயம்'

1 mins read
4b488902-fa4f-4204-b5cc-8b9896221e4e
பாஸ்கர் கலைக் கழகத்தின் கலைவிழாவில் 'டமாரு' குழுவின் பறையாட்டமும் இடம்பெறுகிறது. படம்: டமாரு -

சிங்­கப்­பூ­ரின் பாஸ்­கர் கலைக் கழகம் அதன் 70வது ஆண்டு நிறைவை இவ்­வாண்டு குறிக்­கும் வகை­யில் அதன் வரு­டாந்­தி­ரக் கலை­வி­ழாவை எட்டு நாள்­க­ளுக்கு நடத்­த­வுள்­ளது. இந்­தக் கலை­விழா இரு பாகங்­க­ளாக நடந்­தே­றும்.

கலா­சார பதக்­கம் பெற்ற பாஸ்­கர் கலைக் கழகத்தின் தலைமை நடன இயக்­கு­ன­ரும் கலை இயக்கு­நரு­மான சாந்தா பாஸ்­கர், இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதத்­தில் கால­மா­னதை அடுத்து அவ­ரது வாழ்க்­கை­யை­யும் கலைப்­ப­ணி­யை­யும் இவ்­வாண்­டின் கலை­விழா சிறப்­பிக்­க­வுள்­ளது.

கலை­வி­ழா­வில் கர­காட்­டம் போன்ற பழம்­பெ­ரும் நாட்­டுப்­புற நட­னங்­கள் முதல் கதக்­க­ளி­வழி கதை­சொல்­லும் படைப்பு வரை பல­த­ரப்­பட்ட இந்­திய நடன வகை­களைக் காண முடி­யும்.

மேலும், கலைக் கழகத்தின் புல்­லாங்­கு­ழல் குழு­வும் புதி­தா­கத் தங்­களின் பய­ணத்­தைத் தொடங்­க­வுள்­ளது. இக்­கு­ழு­வைத் தொடங்கு­வது திரு­மதி பாஸ்­க­ரின் நீண்­ட­நாள் கன­வாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இசை­ய­மைப்­பா­ள­ரும் கலை­ஞரு­மான டாக்­டர் கான­வி­நோ­தன் தலை­மை­யில் பதின்ம வயது முதல் 50களில் உள்­ள­வர் வரை இந்­தக் குழு­வில் இடம்­பெ­று­வர்.

நேற்று தொடங்கி ஜூலை 3ஆம் தேதி­வ­ரை­யி­லும் இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி­வ­ரை­யிலும் கலை­வி­ழா­வின் இரண்டு பாகங்­கள் நடந்­தே­று­கின்­றன.

ஒரு நாள் நிகழ்­வுக்­குச் செல்ல விரும்­பு­வோர் $20 நுழை­வுச்­சீட்­டை­யும் எட்டு நாள்­க­ளுக்­கான $136 கலை­விழா அனு­ம­திச்­சீட்­டை­யும் வாங்­க­லாம்.