சக்திவாய்ந்த மொழிபெயர்ப்புக் கருவி

உல­கையே வாட்டி வதைத்த கொரோனா தொற்­று­நோய் இப்­போது ஓய்ந்­துள்­ளது.

கடந்த மூன்று ஆண்டு கால­மாக வீட்­டிற்­குள் முடங்­கிக் கிடந்த மக்­கள் சிறகை விரித்­துப் பறக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர்.

உல்­லா­சப் பய­ணி­கள் விரும்­பிச் செல்­லும் நாடு­களில் சில­வற்­றில் ஆங்­கி­லம் பேசு­ப­வர்­கள் இருந்­தா­லும் பல நாடு­களில் அவர்­க­ளின் தாய்­மொழி மட்­டுமே பேசப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், கூகல் நிறு­வ­னத்தின் மெட்டா நிறுவனம் தனது சக்­தி­வாய்ந்த மொழி­பெ­யர்ப்­புக் கரு­விக்கு மேலும் வலு­வூட்­டி­யுள்­ளது.

உல­கில் பேசப்­படும் மொழி­களில் கிட்­டத்­தட்ட 200 மொழி­க­ளின் தரவு­க­ளைக் கொண்டு செயற்கை நுண்­ண­றிவு தொழில்­நுட்ப உத­வி­யு­டன் விரி­வான மொழி­பெ­யர்ப்­புக் கரு­வியை உரு­வாக்க, தனது நட்பு நிறு­வ­னங்­க­ளு­டன் கைகோத்­து கடு­மை­யா­கப் போராடி வரு­கிறது.

கூக­லின் இந்­தப் பெருந்­திட்­டம் வெற்­றி­க­ர­மாக நிறை­வுற்று அந்த சக்­தி­வாய்ந்த மொழி­பெ­யர்ப்­புக் கருவி விரை­வில் பயன்­பாட்­டுக்கு வரக்­கூ­டும் என்று உல­கம் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­துக்­கொண்­டி­ருக்­கிறது.

2016ஆம் ஆண்டு கூகல் வெளி­யிட்ட தனது மொழி­பெ­யர்ப்­புக் கரு­வி­யில் உள்ள குறை நிறை­க­ளைக் களைந்து 200 மொழி­கள் பயன்­படுத்­தும் வகை­யி­லான பெரும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.

ஓர் அக­ரா­தி­யைப்­போல் அப்­ப­டியே மொழி­பெ­யர்த்­துக் கொடுக்­கா­மல் அந்­தந்த மொழிக்கே உள்ள தனிப்­பண்பு மாறா­மல் வாக்­கி­யங்­கள் அமைக்­கும் முறையை தனது மொழி­பெ­யர்ப்­புக் கரு­வி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆழ­மான கற்­ற­லி­லும் ஆய்­வி­லும் கூக­லின் மெட்டா நிறு­வ­னம் ஈடு­பட்­டுள்­ளது.

கூகல் தற்­போது கொண்­டுள்ள மொழி­பெ­யர்ப்­புக் கரு­வி­யும் பல மொழி­களில், நன்­மு­றை­யில் மொழி­பெ­யர்த்­துத் தரு­கிறது. சில மொழி­களில் மனித மொழி­பெ­யர்ப்­பா­ள­ருக்கு இணை­யாக வாக்­கி­யங்­களை அழ­காக அமைத்­துக் கொடுப்­ப­தா­கத் தெரி­ய­வ­ரு­கிறது.

கூக­லின் இப்­போ­துள்ள மொழி­பெ­யர்ப்­புக் கரு­வி­யின் வளங்­க­ளைச் சேர்த்து சக்­தி­வாய்ந்த, விரி­வான மொழி­பெ­யர்ப்­புக் கரு­வியை உரு­வாக்­கும் பணி­யில் கூக­லின் தாய் நிறு­வ­ன­மான மெட்டா இறங்­கி­யுள்­ளது. இது­கு­றித்து அந்­நி­று­வ­னம் வெளி­யிட்ட ஓர் அறிக்­கை­யில், 200 மொழி­க­ளுக்கு இடையே 40,000க்கு மேற்­பட்ட முறை­யில் சோதித்­துப்­பார்க்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தது.

கூகல் நிறு­வ­னம் மெட்டா மற்­றும் மேலும் சில தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து செயற்கை நுண்­ண­றிவுத் தரவுகளை மாதி­ரி­களைக் கொண்டு உல­கின் எண்­ணற்ற மொழி பேசு­ப­வர்­களை மாபெ­ரும் மொழி­பெ­யர்ப்­புக் கருவி மூலம் இணைக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

இதனை மெட்டா நிறு­வ­னத்­தின் தலை­வர் மார்க் ஸக்­கர்­பெர்க் கடந்த புதன்­கி­ழமை அறி­வித்­தார்.

கிட்­டத்­தட்ட 200 மொழி­க­ளுக்­கான மொழி­பெ­யர்ப்­புத் தர­வு­கள் சேர்க்­கப்­பட்டு சோதிக்­கப்­பட்டு தயார்­நி­லை­யில் உள்­ள­தாக திரு மார்க் ஸக்­கர்­பெர்க், அறி­வித்­தார்.

இந்த இரு­நூறு மொழி பேசு­பவர்­களும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தாங்­கள் பேசும் மொழி­யி­லேயே உரை­யா­டிக்­கொள்­ள­லாம்.

2020ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது இந்­தத் திட்­டம். ஏற்­கெ­னவே இருந்த வச­தி­களை கடந்த இரண்­டாண்­டுக்­குள் இரட்­டிப்­பாக்­கி­யுள்­ள­தாக திரு ஸக்­கர்­பெர்க் தெரி­வித்­தார்.

இந்த செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தி­லான மொழி­பெயர்ப்­புக் கருவி தயா­ரான பின், ஆங்­கில மொழி­யின் புழக்­க­மும் ஆதிக்­க­மும் கணி­ச­மா­கக் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆங்­கி­லம் அல்­லாத எந்­த­வொரு மொழி­யின் உரை­யை­யும் எந்­த­வொரு மொழி­யி­லும் மொழி­பெ­யர்ப்­பதை இந்­தக் கருவி சாத்­தி­ய­மாக்­கி­யுள்­ளது.

அதற்கு ஆங்­கி­லம் முற்­றி­லும் தேவைப்­ப­டாத நிலை உரு­வா­கும். உதா­ர­ணத்­திற்கு பிரஞ்­சுக்­கா­ரர்­களும் சீனர்­களும் தத்­தம் மொழி­யி­லேயே உரை­யா­டிக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!