பாலின சமத்துவத்தில் சிங்கப்பூருக்கு 49வது இடம்

பாலின சமத்துவத்தில் சிங்கப்பூருக்கு 49வது இடம்

1 mins read

உல­கப் பொரு­ளி­யல் மாநாட்டு அமைப்பு உல­க­ளா­வி­ய பாலின சமத்துவம் பற்­றி வெளி­யிட்ட இவ்­வாண்டு அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் 49வது இடத்­தைப் பெற்­றுள்­ளது.

சிங்­கப்­பூர் பாலின சமத்துவத்தில் 73.4 மதிப்­பெண்­கள் பெற்­ற­தாக அறிக்கை குறிப்­பிட்­டது.

பொரு­ளி­யல் பங்­கேற்­பும் வாய்ப்­பும், கல்­வித் தகுதி, சுகா­தா­ர­மும் உயிர்­வாழ்­த­லும், அர­சி­யல் தன்­ன­தி­கா­ரம் ஆகிய நான்கு அம்­சங்­களில் 146 பொரு­ளி­யல்­கள் மதிப்­பி­டப்­பட்­டன.

முதல் மூன்று இடங்­களை ஸ்காண்­டி­னே­விய நாடு­க­ளான ஐஸ்­லாந்து, பின்­லாந்து, நார்வே முறையே பெற்­றுள்­ளன.

நான்­கா­வது இடத்­தில் நியூ­சி­லாந்­தும் ஐந்­தா­வது இடத்­தில் சுவீ­ட­னும் வந்­துள்­ளன. பல­ரும் எதிர்­பார்க்­காத ஆப்­பி­ரிக்க நாடான ருவாண்டா ஆறா­வது இடத்­தைப் பிடித்­தது.

இந்­தியா 62.9 மதிப்­பெண்­கள் பெற்று 135ஆம் இடத்­தில் உள்­ளது.