மிஷலின் நட்சத்திர அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூர் உணவகங்கள்

மிஷலின் நட்சத்திர அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூர் உணவகங்கள்

1 mins read

சிங்­கப்­பூ­ரின் இவ்­வாண்­டுக்­கான சிறந்த உண­வ­கங்­க­ளின் பட்­டி­யலை மிஷ­லின் நிறு­வ­னம் வெளி­யிட்­டி­ருக்­கிறது.

தெற்­கா­சிய வம்­சா­வ­ளி­யி­னர் நடத்­தும் இரண்டு உண­வ­கங்­க­ளுக்கு இரண்டு மிஷ­லின் நட்­சத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கிள­வுட்ஸ்த்­ரீட், தேவர் ஆகி­ய­வையே அந்த உண­வ­கங்­கள்.

சிங்­கப்­பூ­ரின் சிறந்த உண­வ­கங்­களை ஒவ்­வோர் ஆண்­டும் நட்­சத்­தி­ரப்­படி தர­வ­ரி­சைப்­ப­டுத்தி அங்­கீ­க­ரித்து வரு­கிறது.

கொவிட்-19 பர­வ­லால் இரண்டு ஆண்­டு­கள் நேர­டி­யாக நடத்­தப்­ப­டாத விருது நிகழ்ச்சி நேற்­று­முன்­தி­னம் மரீனா பே சாண்ட்­சில் நடை­பெற்­றது. ஏழு புதிய உண­வ­கங்­ க­ளுக்கு ஒரு மிஷ­லின் நட்­சத்­தி­ரம் வழங்­கப்­பட்­டது.

புதி­தாக இரண்டு நட்­சத்­திர அங்­கீ­கா­ரம் பெற்ற இரண்டு உண­வ­கங்­களில் ஒன்­றான கிள­வுட்ஸ்த்­ரீட்டை, இலங்கை வம்சாவளியைச் சேரந்த ரிஷி நளேந்­திராவுக்குச் சொந்­த­மா­னது. சிங்­கப்­பூ­ரரான மனோ தேவர் நடத்­தும் நவீன இந்­திய உண­வ­கத்­துக்­கும் இரண்டு நட்­சத்­திர அங்­கீ­கா­ரம் கிடைத்­தது.

இரண்டு உண­வ­க­வங்­களும் முந்­தைய ஆண்­டு­களில் ஒரு மிஷ­லின் நட்­சத்­திர அங்­கீ­கா­ரத்­தைப் பெற்­றி­ருந்­தன. லேஸ் அமி, ஒடெட், ஸென் ஆகியவை மூன்று நட்­சத்­தி­ரங்­க­ளைப் பெற்­றன.