தேசிய தினக் கொண்டாட்டம்: ஐந்து முக்கிய குடியிருப்புப் பேட்டைகளில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு

தமது 72வது வய­தில் முதல்­மு­றை­யாக நடி­க­ராக மேடை ஏற­வுள்­ளார் திரு­வாட்டி ருக்கு பக்­கி­ரி­சாமி.

கொவிட்-19 காலத்­தில் தன்­ன­லம் கரு­தாது பிற­ருக்குத் தம்­மால் ஆனதை செய்ய முன்­வந்த பல தொண்­டூ­ழி­யர்­களில் ஒரு­வர் திரு­வாட்டி ருக்கு.

வசதி குறைந்­த­வர்­க­ளுக்­கும் இய­லா­த­வர்­க­ளுக்­கும் தின­மும் சமைத்து, அதைப் பொட்­ட­லம்­கட்டி அவர்­கள் வசிக்­கு­மி­டத்­தி­லேயே சென்று கொடுத்து வந்­தார்.

மேலும் முகக்­க­வ­சம், உணவு விநி­யோ­கம் ஆகியவற்றிலும் அவர் பங்­காற்­றி­யுள்­ளார்.

இவ­ரைப்­போல நோய்த்­தொற்று காலத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் எவ்­வாறு ஒற்­று­மை­யு­டன் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உறு­து­ணை­யாய் இருந்­த­னர் என்­பதை விளக்­கும் மேடை நாட­கம் வடக்கு-மேற்கு வட்­டா­ரக் கொண்­டாட்­டத்­தில் அரங்­கேற உள்­ளது.

இந்த நாட­கத்­தில் திரு­வாட்டி ருக்­கு­வும் பங்­கேற்­கி­றார்.

மூன்று பிள்­ளை­களும் எட்டு பேரப்­பிள்­ளை­களும் ஏழு கொள்­ளுப்­பே­ரப்­பிள்­ளை­களும் உள்ள அவர், மூப்­பி­லும் துடிப்பு குறை­யா­த­வர்.

கடந்த 10 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீ சூன் கிழக்கு வட்­டா­ரத்­தில் அடித்­த­ளத் தலை­வ­ராக செயல்­பட்­டு­வ­ருகிறார் இவர்.

“நம்­மு­டைய வாழ்வை இயன்­ற­வரை அடுத்­த­வர்­க­ளுக்குப் பய­னுள்­ள­தாய் அமைத்­துக்­கொள்ள வேண்­டும். நம்­மு­டைய நற்­செ­ய­லால் ஒரு­வர் முகத்­தில் புன்­ன­கையை வர­வ­ழைக்க முடிந்­தால் அதைவிட பெருமை வேறு இல்லை” என்று திருவாட்டி ருக்கு உற்­சா­க­மாய் கூறி­னார்.

- செய்தி: மோனலிசா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!