மறவா அனுபவத்தால் மட்டற்ற மகிழ்ச்சி

மறவா அனுபவத்தால் மட்டற்ற மகிழ்ச்சி

3 mins read
998c65e6-cf0b-4d13-ba04-3fadbb1134e2
(மேல் இடமிருந்து) ரசிகர்களைப் பார்த்து கையசைத்தப்படி ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலுக்குள் நுழைந்த லிவர்பூல் நட்சத்திர வீரர் முகம்மது சாலா. லிவர்பூல் ஆட்டக்காரர்களை நேரில் காண ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலுக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்த தீவிர ரசிகர்கள், தங்கள் அபிமான நட்சத்திரங்களைக் கண்டதும் ஆரவாரம் செய்தனர். கிறிஸ்டல் பேலஸ் ஆட்டக்காரர்களின் கையொப்பத்தைப் பெற மிகுந்த ஆவலுடன் காத்திருந்த அஷம்ஷன் ஆங்கிலப் பள்ளி மாணவர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ் பாவ் -
multi-img1 of 3

தொலைக்­காட்­சி­களில் மட்­டுமே தங்­கள் அபி­மான காற்­பந்­துக் குழு­வான லிவர்­பூ­லின் நட்­சத்­திர வீரர்­

க­ளைப் பார்த்து பழக்­கப்­பட்ட உள்­ளூர் ரசி­கர்­களை நேற்­றைய அனு­

ப­வம் மெய் சிலிர்க்க வைத்­தது.

ஸ்டாண்­டர்ட் சாட்­டர்ட் சிங்­கப்­பூர் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­ யில் சக இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டிக் குழு­வான கிறிஸ்­டல் பேல­சு­டன் மோத சிங்­கப்­பூர் வந்­தி­ருக்­கும் லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­களை வர­வேற்க ரிட்ஸ் கார்ல்­டன் ஹோட்­ட­லுக்கு வெளியே நேற்று காலை 10 மணி அள­வில் ரசி­கர்­கள் திரண்­ட­னர்.

மாலை 4.30 மணி அள­வில் ஸ்டெர்ய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி

­யா­ளர்­கள் அங்கு சென்­ற­போது கடு­க­ள­வும் உற்­சா­கம் குறை­யா­மல் லிவர்­பூல் குழு­வுக்­காக வழி­மேல் விழி­வைத்து கிட்­டத்­தட்ட 300 ரசி­கர்­கள் காத்­துக்­கொண்­டி­ருந்­த­னர்.

லிவர்­பூல் அணி­யி­னரை ஏற்­றிக்­கொண்டு வந்த இரண்டு பேருந்­து ­கள் ஹோட்­டலை அடைந்­த­தும் ரசி­கர்க­ளின் ஆர­வா­ரம், கரவொலி உச்­சம் எட்­டி­ன.

லிவர்­பூ­லின் நிர்­வாகி யர்­கன் கிளோப்­பைப் பின்­தொ­டர்ந்து, வெர்­ஜல் வேன் டைக், முகம்­மது சாலா, அலி­சன் முத­லி­யோர் ரசி­கர்­க­ளைப் பார்த்­துக் கைய­சைத்­த­படி ஹோட்­ட­லுக்­குச் சென்­ற­னர். ஒரு சில ஆட்­டக்­கா­ரர்­கள் ரசி­கர்­க­ளு­டன் படம் எடுத்­துக்­கொண்­ட­னர்.

லிவர்பூல் ஆகக் கடைசியாக 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இதற்­கி­டையே, கிறிஸ்­டல் பேலஸ் குழு­வி­ன­ரை­யும் நேரில் காண ரசி­கர்­கள் மிக ஆவ­லு­டன் திரண்­ட­னர்.

அசம்­ஷன் ஆங்­கி­லப் பள்­ளி­யில் காற்­பந்­துப் பயிற்­சிப் பயி­ல­ரங்கை கிறிஸ்­டல் பேலஸ் நேற்று நடத்­தி­யது.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் விளை­யா­டும் நட்­சத்­தி­ரங்­க­ளு­டன் விளை­யா­டும் அரிய அனு­ப­வம் மாண­வர்­கள் சில­ருக்­குக்

கிடைத்­தது.

அத­னைத்­தொ­டர்ந்து, நடப்­பது நனவா அல்­லது கனவா என்ற உணர்­வி­லி­ருந்து மீள­மு­டி­யா­மல் நட்­சத்­தி­ரங்­க­ளி­டம் மாண­வர்­கள் கையொப்பம் பெற்­றுக்­கொண்

­ட­னர்.

லிவர்­பூல்-கிறிஸ்­டல் பேலஸ் இடை­யி­லான ஆட்­டம் இன்­றி­ரவு 8.35 மணிக்கு தேசிய விளை­யாட்

­ட­ரங்­கத்­தில் நடை­பெ­று­கிறது.

நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்­கான விற்­பனை கடந்த மே மாதம் 17ஆம் தேதி தொடங்­கி­யது. நுழை­வுச்­

சீட்­டு­க­ளின் விலை $149லிருந்து $299 வரை. https://premier.ticketek.com.sg/events/SCSC22/venues/NST/performances/ESPH2022807/tickets எனும் இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­க­லாம்.

லிவர்­பூல் அணி நேற்­றி­ரவு தேசிய விளை­யாட்­ட­ரங்­கத்­தில் பயிற்­சி­யில் ஈடு­பட்­டது. மாலை 6.30 மணிக்­குப் பயிற்சி தொடங்­கி­யது. $39 பெறு­மா­ன­முள்ள நுழை­வுச்­

சீட்­டு­களை வாங்கி லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­கள் பயிற்­சி­யில் ஈடு­ப­டு­வதை ரசி­கர்­கள் நேரில் கண்டு களித்­த­னர்.

இன்றைய ஆட்­டத்தை ஸ்டார்­ஹப் அதன் புதிய ஒளி­வ­ழி­யான ஹப் பிரி­மி­ய­ரில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்­நி­லை­யில், லிவர்­பூல் அணி சிங்­கப்­பூர் வந்­தி­ருப்­பது குறித்து அக்­கு­ழு­வின் உள்­ளூர் ரசி­கர்­க­ளி­டம் தமிழ் முரசு பேசி­யது.

"இன்­றைய ஆட்­டத்­திற்­கான கட்­ட­ணத்­தின் குறைந்­த­பட்ச விலை $149. எனவே ஆட்­டத்­தைக் காண நான் நேரில் செல்­ல­வில்லை ஆனால், தொலைக்­காட்­சி­யில்

நிச்­ச­யம் பார்ப்­பேன்.

"நட்­பு­முறை ஆட்­டம் என்­ப­தால் போட்­டி­யின் முடி­வைப் பற்றி பெரி­தாகக் கவ­லை­யில்லை. லிவர்­பூ­லின் இளம் ஆட்­டக்­கா­ரர்­கள் எவ்­வாறு விளை­யா­டு­கி­றார்­கள் என்­ப­தைப் பார்க்க ஆவ­லாக இருக்­கிறது," என்று முழுநேர தேசிய சேவை­யா­ளர் இஜாஸ் அஹ­மது, 19 தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் பல இன

மக்­கள் இது­போன்ற ஆட்­டங்­

க­ளைக் காண ஒன்­று­கூ­டு­வது மகிழ்ச்சியைத் தருகிறது. லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர்­களை நேரில் காண நேற்று காலை ரிட்ஸ்-கார்ல்­டன் ஹோட்­ட­லுக்­குச் சென்­றி­ருந்­தேன்," என்று எண்­ணெய், எரி­வாயு துறை ஊழி­ய­ரான தினேஷ் குமார், 37 பகிர்ந்­து­கொண்­டார்.

"இதற்கு முன்பு லிவர்­பூல் குழு சிங்­கப்­பூ­ருக்கு வந்தபோது அவர்­

க­ளைக் காண முடி­யா­மல் போன­தால் இம்­முறை வாய்ப்­பைத் தவ­ற­வி­டக்கூடாது என்­ப­தற்­காக இன்­றைய ஆட்­டத்­திற்குச் செல்கிறேன். லிவர்­பூல் அணி­யின் அனைத்து விளை­யாட்­டா­ளர்­களும் சிங்­கப்­பூர் வந்­தி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்­சியை அளிக்கிறது," என்று கிரா­பிக்ஸ் வடி­வ­மைப்­பா­ளரான ஜெரார்ட் ராஜன், 26, கூறினார்.

லிவர்­பூல் அணி­யின் தீவிர ரசி­க­ரான 40 வயது பிர­காஷ் பன்­னீர்­செல்­வன், 40, நேற்றிரவு ஆஸ்­தி­ரே­லியா சென்­ற­தால் இன்று நடை­பெ­ற­வி­ருக்­கும் ஆட்­டத்தை அவ­ரால் காண முடி­யா­து. ஆனால், இது அவருக்கு எவ்வித ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

"இது வெறும் நட்புமுறை ஆட்­டம் என்­ப­தால் பொதுவாக முக்­கிய ஆட்­டக்­கா­ரர்­கள் அதிக நேரம் விளை­யாட மாட்­டார்­கள். ஆகை­யால், இங்­கி­லாந்­தில் லிவர்பூல் களமிறங்கும் பிரிமி­யர் லீக் ஆட்­டங்­களை நேரில் சென்று காண முயற்சி செய்வேன்," என்று

தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­ச­கரான பிரகாஷ் தெரிவித்தார்.

கூடுதல் செய்தி:

யுகேஷ் கண்ணன்