இரவுநேர உணவுக்குப் பிறகு குறைந்தது 10 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும் மனதிற்கும் நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் சாத்தியம் குறையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 நிமிட நடைப்பயிற்சியில் வளர்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும். கலோரிகளும் குறையும். பலரை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுத்துவிடலாம் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
சாப்பிட்ட பிறகு உடனடியாகப் படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்சினை ஆகியவை ஏற்படக்கூடும். இவற்றையெல்லாம் தவிர்க்க இந்தப் பத்து நிமிட நடைப்
பயிற்சி பெரிதும் உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரவுநேர நடைப்பயிற்சி உடல்நலம் மட்டுமல்லாமல் மனநலத்தையும் மேம்படுத்த உதவும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்குச் சாப்பிட்ட உணவு எளிமையாக செரிமானம் ஆகும். இதனால் வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். உணவு வேகமாக செரிமானம் அடைவதால்
உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன.
இதனால், உடல் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
இரவுநேர நடைப்பயிற்சி மனவுளைச்
சலைக் குறைத்து நல்ல தூக்கத்தைத் தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

