மதுபானத்தால் இளையர்களுக்கு அதிக அபாயம்

மதுபானத்தால் இளையர்களுக்கு அதிக அபாயம்

2 mins read
e6bbebc8-a389-4dcd-99fb-a458541bc023
மதுபானம் அருந்துவதால் பெரியவர்களைவிட இளையர்களுக்கே சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது ஆய்வு ஒன்றில்தெரியவந்துள்ளது. கோப்புப் படம்: தி டாண்டி கலெக்‌ஷன் -

மது­பா­னம் அருந்­து­வ­தால் பெரி­ய­வர்­க­ளை­விட இளை­யர்­க­ளுக்கே சுகா­தாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபா­யம் அதிகம் இருப்­ப­தாக ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது. அந்த ஆய்­வின் முடி­வு­கள் 'தி லான்­சட்' மருத்­துவ சஞ்­சி­கை­யில் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

மதுப் பழக்­கம் தொடர்­பில் அவரவர் வசிக்­கும் பகுதி, அவரின் வயது, பாலி­னம் உள்­ளிட்டவற்றைக் கருத்­தில்­கொண்டு மிகத் துல்­லி­ய­மான விவ­ரங்­களை வெளி­யிட்­டுள்ள முதல் மருத்­துவ ஆய்வு இது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒரு­வர் வசிக்கும் பகுதி, அவ­ரின் வயது ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொண்டே மது அருந்­து­வ­தன் தொடர்­பி­லான வழி­மு­றை­களை வரை­ய­வேண்­டும் என்று ஆய்வு பரிந்­து­ரைக்­கிறது. குறிப்­பாக 15லிருந்து 39 வய­துக்கு உள்­பட்ட ஆண்­க­ளுக்கு ஆகக் கட்­டுப்­பாட்­டான வழி­மு­றை­க­ளைப் பரிந்­து­ரைப்­பது நல்­லது என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

உல­க­ள­வில் மது அருந்­து­வ­தால் இந்த வய­துப் பிரி­வில் இருக்­கும் ஆண்­க­ளுக்கே அபா­யம் அதி­கம் இருப்­பது இதற்­குக் கார­ணம்.

சிறி­த­ளவு மது அறுந்­து­வ­தன் மூலம் சுகா­தா­ரப் பிரச்­சினை ஏதும் இல்­லாத 40 வய­தைத் தாண்­டி­யோர் பல­ன­டை­யக்­கூ­டும் என்­றும் அந்த ஆய்வு தெரி­வித்­துள்­ளது. அத்­தகையோர் தின­மும் சிறி­த­ளவு மது அருந்­தி­னால் அவர்­க­ளுக்கு நீரி­ழிவு நோய், பக்­க­வா­தம் உள்­ளிட்ட நோய்­கள் வரு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் குறைவு என்­பது பலன்­களில் ஒன்று.

204 நாடு­களில் மக்­க­ளின் மதுப் பழக்­கத்­தின் தொடர்­பி­லான கணிப்புகள் கருத்­தில்­கொள்­ளப்­பட்­டன. அவ்வாறு 2020ஆம் ஆண்­டில் 1.34 பில்­லி­யன் மக்­கள் அள­வுக்கு அதி­க­மாக மது­பா­னம் உட்­கொண்­டது தெரி­ய­வந்­தது.

ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து வட்­டா­ரங்­க­ளி­லும் 15லிருந்து 35 வய­துக்கு உள்­பட்ட ஆண்­கள்­தான் அள­வுக்கு அதி­க­மாக மது­பா­னம் அருந்­து­கின்­ற­னர். அந்­தப் பழக்­கத்­தால் இப்­பிரிவினருக்கு எவ்­வித சுகா­தா­ரப் பலன்­களும் இல்லை. மாறாக, இவர்­க­ளுக்கு சுகா­தார ரீதி­யாக ஆபத்­து­தான் அதி­கம் உள்­ள­தென ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

பொது­வாக மதுப் பழக்­கம் தொடர்­பி­லான 60 விழுக்­காட்­டுக் காயங்­கள் இந்­தப் பிரி­வி­ன­ரிடையே­தான் அதி­கம் ஏற்­ப­டு­வ­தா­க­வும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர். வாகன விபத்­து­கள், உயி­ரை மாய்த்­துக்­கொள்­வது உள்­ளிட்­டவற்றின் தொடர்பிலான காயங்கள் அவற்­றில் அடங்­கும்.

"நாங்­கள் சொல்ல நினைப்­பது இது­தான்: இளை­யர்­கள் மது அருந்தக்­கூ­டாது, ஆனால் சிறி­த­ளவு மது அருந்­து­வ­தால் வய­தில் மூத்­த­வர்­கள் பல­ன­டை­ய­லாம்," என்று ஆய்வை மேற்­கொண்­டோ­ரில் ஒரு­வ­ரான மூத்த ஆய்வு ஆசி­ரி­யர் இம்­மே­னு­வெலா கக்­கிடூ சொன்­னார். அவர் அமெ­ரிக்­கா­வின் வாஷிங்­டன் பல்­க­லைக் கழ­கத்­தின் சுகா­தா­ரக் கழ­கம் ஒன்­றில் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

"இளை­யர்­கள் அறவே மது அருந்தமாட்டார்கள் என்று எண்­ணு­வது யதார்த்­தத்­துக்கு மாறா­ன­தாக இருக்­க­லாம், ஆனால் அப்பழக்கம் விளைவிக்கக்கூடிய அபா­யங்­க­ளுக்­கான ஆக அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­ட இந்த ஆதா­ரத்தை அவர்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும். அப்­போது­தான் அனை­வ­ராலும் உடல்­நலம் தொடர்­பில் நல்ல முடிவு­களை எடுக்­க­முடி­யும்," என்­றும் அவர் சொன்­னார்.