ஃபேஸ்புக்கில் ஒருவர் ஐந்து பக்கங்களை வைத்திருக்கலாம்

ஃபேஸ்புக்கில் ஒருவர் ஐந்து பக்கங்களை வைத்திருக்கலாம்

2 mins read
ae0c938c-89e1-429c-9b5b-c9c94bd54850
ஃபேஸ்புக்கில் வரக்கூடிய மாற்றம். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

'ஃபேஸ்புக்' சமூக வலைத்­த­ளத்­தில் ஒரு­வர் ஐந்து பக்­கங்­கள் வரை வைத்­தி­ருக்க வகை­செய்­யப்­போவதாக அதை நிர்­வ­கிக்­கும் மெட்டா நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அதன் மூலம் தங்­க­ளின் விருப்­பங்­கள், உற­வு­கள் உள்­ளிட்ட அம்­சங்­க­ளுக்கு ஏற்றவாறு மக்­கள் ஃபேஸ்புக்­கைப் பயன்­படுத்­த­லாம் என்று மெட்டா அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

உதா­ர­ண­மாக, ஃபேஸ்புக்­கில் ஒரு­வர் தங்­க­ளின் நண்­பர்­க­ளுக்கு ஏற்ற பதி­வு­களை ஒரு பக்­கத்­தில் பதி­வி­ட­லாம். வேறு பக்கத்தில் தங்­க­ளின் உற­வி­னர்­க­ளுக்­கும் குடும்­பத்­தா­ருக்­கும் ஏற்றவற்றைப் பதிவிடலாம் என்று மெட்டா சொன்னது.

இதன் மூலம் ஃபேஸ்புக்­கில் கூடுதல் நீக்­குப்­போக்கு ஏற்படுகிறது.

எனி­னும், ஃபேஸ்புக்­கில் ஒவ்­வொரு பய­னீட்­டா­ள­ருக்­கும் ஒரே பக்­கம் இருக்­க­வேண்­டும் என்ற விதி­மு­றையை மெட்டா தொடர்ந்து வலி­யு­றுத்­தும். பய­னீட்­டா­ள­ரின் தலைமை பக்­கம் அவ­ரின் சொந்­தப் பெய­ரையும் கொண்­டி­ருக்­க­வேண்­டும்.

அந்­தப் பக்­கத்­திற்­குச் சென்று அதி­லி­ருந்­து­தான் பய­னீட்­டா­ளர் தனது இதர பக்­கங்­க­ளுக்­குப் போக­மு­டி­யும்.

பய­னீட்­டா­ளர்­க­ளின் மற்ற பக்­கங்­கள் அவ­ரின் சொந்­தப் பெய­ரைக் கொண்­டி­ருக்­கத் தேவை­யில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்டது.

இந்த மாற்­றம், உல­கின் ஆகப் பெரிய சமூக வலைத்­த­ள­மா­கக் கரு­தப்­படும் ஃபேஸ்புக்­கில் ஒரு­வர் தனது உண்­மை­யான அடை­யாளத்தை முழு­மை­யாக வெளி­யிடா­மல் இருக்க வகை­செய்­கிறது. டிக்­டாக், டுவிட்­டர் மெட்­டா­விற்­குச் சொந்­த­மான இன்ஸ்­ட­கி­ராம் ஆகிய இதர சமூக வலைத்­த­ளங்­களில் இந்த நீக்­குப்­போக்கு தற்­போது இருக்­கிறது.

ஒரு பய­னீட்­டா­ள­ரின் தலைமை பக்­கத்­தின் வாயி­லாக மட்­டுமே சில சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­த­மு­டி­யும் என்று கூறப்­ப­டு­கிறது. ஃபேஸ்புக்­கில் ஒரு பக்­கத்தை உரு­வாக்கி அதற்­குப் பொறுப்பு வகிப்­பது, 'ஃபேஸ்புக் டேட்­டிங்' எனும் அந்­தத் தளத்­தின் மூலம் காதல் ஜோடி­களைத் தேடிக்­கொள்­வது உள்­ளிட்டவை அவற்­றில் அடங்­கும்.

தவ­றான அர்த்­தத்­தைத் தரக்­கூ­டிய அடை­யா­ளங்­கள், பிற­ரின் அடை­யா­ளத்­தைப் பயன்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான தனது விதி­மு­றை­கள் எல்லா ஃபேஸ்புக் பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் பொருந்­தும் என்று மெட்டா அறிக்­கை­யில் தெரிவித்­தது.

சில நாடு­களில் இந்த மாற்­றம் சோதிக்­கப்­ப­டு­வ­தாக மெட்­டா­வின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார். ஆனால் அந்த நாடுகள் குறித்த விவரங்களை அவர் தெரி­விக்­க­வில்லை.

ஃபேஸ்புக் பய­னீட்­டா­ளர்­க­ளைத் தொடர்ந்து தன்­வ­சம் வைத்­தி­ருக்க மெட்­டா­வின் முயற்­சி­யா­க­வும் இந்த மாற்­றத்தை சிலர் கருதுகின்றனர். டிக்­டாக் போன்ற இதர சமூக வலைத்­த­ளங்­க­ளு­டன் இருந்­து­வ­ரும் போட்­டி­யைச் சமாளிக்க இந்­நடவடிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் மெட்டா முதன்­மு­றை­யாக மனித உரிமை விவ­ரங்­களைக் கொண்ட அறிக்­கையை வெளி­யிட்­டது. அந்த அறிக்­கையை ஆண்டு­தோ­றும் வெளி­யி­டத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இணை­யத்­தில் நிக­ழும் துன்­புறுத்­தல் சம்­ப­வங்­களை மெட்டா சரி­வ­ரக் கவ­னிக்­க­வில்லை என்ற குறை சில தரப்­பி­ன­ரி­டையே இருக்கும் வேளையில் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.