உடல் எடையைக் குறைக்க அவல் உணவு

உடல் எடையைக் குறைக்க அவல் உணவு

2 mins read
2a8a42f9-0282-4cf7-96d4-a3c176756f41
அவலால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளில் ஒன்றான அவல் கொழுக்கட்டை. அவலால் தயாரான உணவு வகைகள் இந்தியர்களிடையே பிரபலமானவை.கோப்புப் படம்: ஜெயஸ்ரீஸ் கிட்சன் -

பலர் தங்­க­ளின் உடல் எடை­யைக் குறைக்க என்ன செய்­ய­லாம், எதை உண்­ண­லாம் போன்ற தக­வல்­க­ளைச் சேக­ரிக்க தீவிர முயற்­சி­யில் இறங்­கு­வ­துண்டு. சிலர் அதி­கம் செலவு செய்து பல்­வேறு உடல் எடை குறைப்பு திட்­டங்­க­ளி­லும் சேர்­வ­துண்டு.

ஆனால் இந்­தி­யர்­க­ளுக்­குப் பரிச்­ச­ய­மான அவ­லால் தயா­ரா­கும் சுவை­யான உணவு வகை­களை உட்­கொண்டு உடல் எடை­யைக் குறைக்­க­லாம் என்­கிறது 'டைம்ஸ்­ஆ­ஃப்­இந்­தியா' ஊட­கத்­தில் வெளி­யான ஒரு செய்தி.

காலை­யில் அவ­லால் தயா­ரான உண­வைச் சாப்­பிட்­டால் அது செரிப்­பது சுல­பம். அதன் மூலம் உட­லின் கொழுப்­பைக் கரைக்­கும் ஆற்­றல் அதி­க­ரிக்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அத­னால் உட­லின் செரி­மான முறை­யும் சீராக இயங்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

அவ­லில் உட­லுக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்து அதி­கம் என்­றும் உணவு ஊட்­டச்­சத்து நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

மிக­வும் சுவை­யாக இருந்­தா­லும் அவ­லில் கலோ­ரிக்­கள் குறைவு. இந்த அம்­ச­மும் உடல் எடை­யைக் குறைக்­கக் கைகொடுக்கும்.

நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­க­ளுக்­கும் இத­னால் பலன் இருக்­கிறது. ரத்­தத்­தின் சர்க்­கரை அள­வைக் குறை­வாக வைத்­தி­ருக்க அவல் உத­வு­கிறது. சர்க்­கரை நோய் இருப்­ப­வர்­கள் மட்­டு­மன்றி அனை­வருக்­கும் இது பல­ன­ளிக்­கும் ஓர் அம்­சம்.

மேலும், அவ­லில் 'வைட்­ட­மின் பி' ஊட்­டச்­சத்து அதி­கம் உள்­ளது. அத­னால் மூளை­யைத் துடிப்­பு­டன் இயங்க வைக்­கும் ஆற்­றல் இதில் இருக்­கிறது.

அவ­லைக் கொண்டு பல்­வேறு உணவு வகை­க­ளைத் தயார் செய்­ய­லாம். மேல்­கா­ணும் படத்­தில் இருப்­ப­தைப் போல் அவல் கொழுக்­கட்டை அவற்­றில் ஒன்று.

காய்­க­றி­க­ளு­டன் அவ­லைச் சமைத்து 'வெஜி போஹா' என்ற உணவு வகை­யை­யும் தயார் செய்­ய­லாம்.

அதற்­குப் பதி­லாக பழங்­க­ளைச் சேர்த்து 'ஃபுரூட்டி போஹா' என்ற அவல் உணவு வகை­யை­யும் தயார் படுத்­த­லாம்.

'டைம்ஸ்­ஆ­ஃப்­இந்­தியா'வில் வெளி­யான தக­வல்­க­ளைக் கொண்டு இந்­தக் குறிப்­பு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.