நாவைச் சுண்டியிழுக்கும் உணவுச் சங்கமம்

வழக்­க­மாக உட்­கொள்­ளும் உணவு வகை­கள் சலிப்­புத் தட்­டும்­போது நாவு மாறு­பட்ட உண­வுக்கு ஏங்­கு­வது மனித இயல்பே. அப்­ப­டிப்­பட்ட ஏக்­கத்­து­டன் இருப்­போ­ரின் குறை­யைத் தீர்த்­து­வைக்­கக் கள­மி­றங்­கி­யுள்­ளன 'டிஃபின் ரூம்', 'மீட்ஸ்­மித் லிட்­டில் இந்­தியா' உண­வ­கங்­கள்.

இவ்­விரு உண­வ­கங்­களும் இணைந்து சிறப்பு சங்­கம உணவு வகை­க­ளைத் தயார் செய்­கின்­றன. இந்த ஏற்­பாட்­டின்­கீழ் 'டிஃபின் ரூம்' உண­வ­கத்­தின் வட இந்­திய உணவு வகை­களும் 'மீட்ஸ்­மித் லிட்­டில் இந்­தியா'வின் இந்­தி­யக் கல­வை­யு­டன் வரும் அமெ­ரிக்க உணவு வகை­களும் சங்­க­மிக்­கின்­றன.

சைவ, அசைவ உணவு வகை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

'டிஃபின் ரூம்'மின் சமை­யல் கலை­ஞர் குல்­டிப் சிங், 'மீட்ஸ்­மித் லிட்­டில் இந்­தியா'வின் சமை­யல் கலை­ஞர் எட்­வின் டான் ஆகி­யோ­ரின் கைவண்­ணத்­தால் இந்த உண­வுச் சங்­க­மம் அரங்­கே­று­கிறது.

பீச் ரோட்­டில் இருக்­கும் ராஃபிள்ஸ் ஹோட்­ட­லில் உள்ள 'டிஃபின் ரூம்' உண­வ­கத்­தில் இந்த உண­வால் வயிற்றை நிரப்­பிக்­கொள்­ள­லாம்.

மதிய உணவு, இரவு உணவு இரண்­டுக்­கும் இந்த ஏற்­பாடு பொருந்­தும். நேற்று முன்­தி­னம் தொடங்­கிய உண­வுச் சங்­க­மம் இம்­மா­தம் 28ஆம் தேதி­வரை நீடிக்­கும்.

சென்ற ஆண்­டின் அமோக வர­வேற்­பிற்­குப் பிறகு இரண்­டா­வது ஆண்­டாக 'டிஃபின் ரூம்', 'மீட்ஸ்­மித் இந்­தியா' உணவு வகைகள் சங்கமிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!