பன்னாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள்

பன்னாட்டுத் தமிழ்ச் சிறுகதைகள்

1 mins read
66e22b7f-be9e-40a7-bf34-f9ba8a3648f5
முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மியின் சிறுகதைப் புத்தகத்தின் முகப்பு. இந்நூல், சிங்கப்பூரின் தமிழ் இலக்கியச் சூழலில் புதியதொரு முயற்சி எனச் சொல்லப்படு. படம்: முனைவர் எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி -

பன்­னாட்­டுத் தமிழ்ச்­ சி­று­க­தை­கள் எனும் தொகை­நூல் ஐந்து கண்­டங்­களில் வாழும் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் வாழ்­வி­யல் முறை­களை­யும் அவர்­கள் எதிர்­கொள்­ளும் சிக்­கல்­க­ளை­யும் விவரிக்கிறது.

சிங்­கப்­பூர், மலே­சியா, இலங்கை ஆகிய நாடு­கள் ஒவ்­வொன்­றுக்­கும் ஆறு கதை­கள் இந்­நூ­லில் உள்­ளன. எஞ்­சிய 12 கதை­கள் அமெ­ரிக்கா, ஆஸ்­திரே­லியா, பிரான்ஸ், கனடா, இங்­கி­லாந்து உள்ளிட்ட நாடு­க­ளி­லிருந்து தொகுக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த முனை­வர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி இந்நூலின் தொகுப்­பா­சி­ரி­யர்.

இதன் வாயி­லாக உல­கத் தமிழ் எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­களை ஒரு­சேர வாசிக்­கும் வாய்ப்பு வாச­கர்­க­ளுக்­குக் கிடைக்­கும் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வெளியீடு கண்ட இந்நூல், இம்மாதம் ஒன்பதாம் தேதி சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. நூலைப் பெற விரும்புவோர் முனைவர் ஸ்ரீலஷ்மியைத் தொடர்புகொள்க: 91014612, lakshmishri00@gmail.com.