செயற்கை நுண்ணறிவுகொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மனவியல் கருத்தாய்வு மகிழ்ச்சி அடைவதற்கான வழியைத் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது.
'டீப் லாஞ்சேவிட்டி' எனும் நிறுவனமும் ஹார்வர்ட் மருத்துவப் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நான்சி எட்காஃப் எனும் விஞ்ஞானியும் இதை உருவாக்கியுள்ளனர்.
ஒருவரின் மனவியல் ரீதியிலான வயதை அறியும் நோக்கில், ஒரு கருத்தாய்வவை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பத்தாண்டுக்குப் பின்னர் மனம் எந்த வயதில் இருக்கும் என்பதையும் இது கணிக்கும். மனித மனம் மூப்படையும்போது அடையும் மாற்றத்தைச் செயற்கை நுண்ணறிவு கணிக்கிறது.
கருத்தாய்வில் கிடைத்த விடை களுக்கு ஏற்ப, அதைச் செய்தவர் மகிழ்ச்சி அடையவும் மனநலம் மேம்படவும் குறிப்பிட்ட வழிகளை அத்தளம் பரிந்துரை செய்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தப்படுவதால் பரிந்துரைகள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன.
https://futurself.ai/ எனும் இணையத்தளத்தில் கருத்தாய்வு இடம்பெற்றுள்ளது.

