மின்னியல் குப்பையை அகற்றும் வழிகள்

புதிய கைபேசி அல்­லது கை­க­ணி­னியை வாங்­கி­விட்­டீர்­கள். பழை­யதை வீச வேண்­டும். ஆனால் அதை குப்­பைத் தொட்­டி­யில் போட்­டு­விட வேண்­டாம்.

பழைய, வேண்­டாத மின்­னி­யல் சாத­னங்­களை வீசும்­போது கவ­னம் முக்­கி­யம். மின்­க­லம் இருப்பதால், கைபே­சி­கள், கைக்­க­ணி­னி­கள், தொலைக்­காட்­சிப் பேழை­கள், கணி­னி­கள், மடிக்­க­ணி­னி­கள் உள்­ளிட்ட மின்­னி­யல் சாத­னங்­க­ளைக் குப்­பைத் தொட்­டி­யில் வீசக்­கூ­டாது.

இந்­தச் சாத­னங்­களில் ஆபத்து ஏற்­ப­டுத்­தும் கழி­வு­கள் என்று வகைப்­ப­டுத்­தப்­பட்ட நச்­சுத்­தன்மை உள்ள இரும்­பு­கள் இருக்­கக்­கூ­டும் என்­பதே அதற்­குக் கார­ணம்.

வேண்­டாத மின்­னி­யல் சாத­னங்­க­ளைப் பாது­காப்­பாக வீசு­வது சுற்­றுச்­சூ­ழல் கேட்­டை­யும் குறைக்­கும். மின்­னி­யல் சாத­னங்­களை முறை­யா­கக் கழிக்­கும்­போது அவற்­றில் உள்ள கண்­ணாடி, இரும்பு போன்­ற­வற்றை மறு­ப­ய­னீடு செய்­ய­லாம்.

சிங்­கப்­பூ­ரில் மின்­னி­யல் கழி­வு­களை வீச பல வழி­கள் உண்டு. பொது இடங்­கள், கடைத்­தொ­குதி கள், சமூக மன்­றங்­கள், போன்­ற­வற்­றில் மறு­ப­ய­னீட்­டுத் தொட்­டி­கள் ைக்­கப்­பட்­டுள்­ளன.

மின்­னி­யல் சாத­னங்­களை விற்­கும் பெரிய கடை­களில் அவற்றை வீசு­வ­தற்­கான தொட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

சில நக­ர­ மன்­றங்­களும் அவ்­வப்­போது மின்­னி­யல் கழி­வுகளைப் பெற்றுக்கொள்கின்றன.

சிங்கப்பூரில் மின்கழிவுகளை ஒப்படைக்கும் இடங்களைக் காண: https://www.nea.gov.sg/our-services/waste-management/3r-programmes-and-…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!