வீட்டில் வேலை, மாறுபட்ட சவால்கள்

வீட்டில் வேலை, மாறுபட்ட சவால்கள்

3 mins read
0e6a70fd-3587-4c7a-b5d8-d27f0185eb0b
வீட்டில் இருந்து வேலை செய்வது உலகெங்கும் வழக்கமாகிவிட்டது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்­டில் இருந்­த­படி வேலை பார்ப்­பது என்­பது முன்­பெல்­லாம் அரி­தான ஒன்­று. கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்­குப் பிறகு அது அதிகம் பின்பற்றப்படுகிறது என்பது அனை­வ­ருக்­கும் தெரிந்­ததே.

இப்­போது கொள்­ளை­நோய்ப் பர­வ­லி­லி­ருந்து உல­கம் மீண்டு வந்து­கொண்­டி­ருப்பதால் பலர் மீண்டும் தங்­க­ளின் வேலை­யி­டங்­களுக்­குச் செல்­லத் தொடங்­கி­விட்­ட­னர். ஆனால் முன்­பைப்­போல் தின­மும் அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­யும் போக்கு இப்­போது இல்லை.

சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல நாடு­கள் வீட்­டில் வேலை பார்க்­கும் முறை­யைப் பின்­பற்­று­மாறு நிறு­வனங்­களை ஊக்­கு­விக்­கின்­றன. தின­மும் வேலை­யி­டத்­துக்கு வரு­மாறு ஊழி­யர்­க­ளைக் கட்­டா­யப்­படுத்­தி­னால் அவர்­களில் பலர் வேலை­யி­லி­ருந்து வில­கி­வி­டு­வர் என்­றும் சில கருத்­தாய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும்­போது மனை­வு­ளைச்­ச­லின்றி சொந்த வேலை­கள், குடும்­பப் பொறுப்­பு­கள் உள்­ளிட்­ட­வற்­றைக் கவ­னித்­துக்­கொண்­ட­படி பணி­யில் ஈடு­ப­ட­லாம் போன்ற கார­ணங்­களால் பல ஊழி­யர்­கள் இதை விரும்­பு­கின்­ற­னர்.

ஆனால் விட்­டில் வேலை பார்க்கும்­போது வேறு சில சவால்­கள் இருக்­கவே செய்­கின்­றன.

அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­யும்­போது குறிப்­பிட்ட நேரத்­திற்­குப் பிறகு அதைப் பற்­றிக் கவ­லைப்­படத் தேவை­யில்லை என்ற நிலை இருக்­கும். வீட்­டில் வேலை பார்க்­கும்­போதோ வேலை நேரத்­திற்கு அப்­பா­லும் பணி­யில் ஈடு­படும் சூழல் உரு­வா­வ­தாக சிலர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­த­னர்.

உதா­ர­ண­மாக வீட்­டில் வேலை பார்க்கும்போது எந்­நே­ரத்­தி­லும் நிர்­வா­கி­க­ளி­ட­மி­ருந்து மின்­னஞ்­சல்­கள் வரக்­கூ­டும். அவற்­றுக்­குப் பதி­லளிக்­கும் கட்­டா­யத்­தில் இருப்­ப­தாக ஊழி­யர்­கள் கூறினர்.

சுருக்­க­மா­கச் சொன்­னால் வேலைச் சூழல், வீடு இரண்­டுக்­கும் உள்ள வித்­தி­யா­சம் அதி­கம் இல்­லா­மல் போகிறது. வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தில் சில பலன்­கள் இருந்­தா­லும் அத­னால் கூடு­தல் நேரம் வேலை பார்க்க நேரி­டு­வதாக அண்­மை­யில் நடத்­தப்­பட்ட சில ஆய்­வு­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 1,200 பேரைக் கொண்டு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஒரு கருத்­தாய்வை நடத்­தி­யது. வீட்­டில் வேலை பார்க்­கத் தொடங்­கி­யதிலிருந்து மன­வு­ளைச்­சல் அதி­க­மா­ன­தாக அந்­தக் கருத்­தாய்­வில் பங்­கேற்­றோ­ரில் 71 விழுக்­காட்­டி­னர் கூறி­னர்.

அதற்­குப் பிறகு இவ்­வாண்டு ஜன­வரி மாத­மும் 1,076 ஊழி­யர்­களைக் கொண்டு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்­றொரு கருத்­தாய்வை நடத்­தி­யது. ஈராண்­டு­க­ளுக்கு முன்பு கொள்­ளை­நோய்ப் பர­வல் தொடங்கி யதி­லி­ருந்து கூடு­தல் நேரம் வேலை செய்­யும் நிலை உரு­வா­கி­யுள்­ள­தாக அதில் பங்­கேற்­றோ­ரில் இருவரில் ஒரு­வர் தெரி­வித்­தார்.

வீட்­டுப் பொறுப்­பு­க­ளுக்­கும் வேலை நேரத்­துக்­கும் அதிக வித்­தி­யா­சம் இல்­லா­மல் இருப்­பது, வேலை­யி­லி­ருந்து வில­கிய சக ஊழி­யர்­க­ளின் பணி­க­ளை­யும் சேர்த்து செய்­ய­வேண்­டி­யி­ருப்­பது. இவை, வீட்­டில் கூடு­தல் நேரம் வேலை செய்­ய­வேண்­டி­ய­தற்­கான முக்­கிய கார­ணங்­களில் சில என்­பது தெரி­விக்கப்பட்டது.

இது எதிர்­பா­ர்த்ததே என்­கின்­ற­னர் சில கவ­னிப்­பா­ளர்­கள். உல­க­ளவி­லும் கொவிட்-19 பல­ரின் வேலை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஊழி­யர்­கள் சிலர் வார இறுதி நாள்­களில் வேலை செய்ய நேரிடு­கிறது. குறிப்­பிட்ட நேரத்­தை­யும் தாண்டி அவர்­கள் அடிக்­கடி பணி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

இத்தகைய பிரச்சினைகளைச் சரி­செய்ய கூடு­தல் நாள்­கள் வேலை­யி­டத்­திற்­குக் சென்று வேலை பார்க்­க­லாம். ஆனால், அப்­ப­டித்­தான் செய்­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

வீட்­டில் வேலை செய்­யும்­போது அவ்­வப்­போது ஓய்வு எடுக்­க­லாம். குடும்­பத்­தா­ரு­டன் வேலைக்­குத் தொடர்­பில்­லாத விவ­கா­ரங்­க­ளைப் பற்­றிப் பேசலாம். சில நிமி­டங்­களுக்கு சொகுசு நாற்­கா­லி­யில் அமர்ந்­தும் ஓய்வு எடுக்­க­லாம் எனப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது.

மெய்­நி­க­ரில் வேலை சந்­திப்­பில் கலந்­து­கொள்­ளும்­போது முடி­யும்­போ­தெல்­லாம் முகத்­தைக் காட்­டா­மல் பங்­கேற்­க­லாம் என்று 'ரேவன் கௌன்­ச­லிங் அண்ட் கொன்­சல்­டன்சி' மன­நல ஆலோ­சனை நிலை­யத்­தில் மன­நல நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றும் திரு பிர­வீன் நாயர் அறி­வுரை வழங்­கு­கி­றார். இதன் மூலம் மூளைக்கு சற்று ஓய்வு கிடைக்­கலாம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

அதே வேளை­யில் சிலர் வீட்­டில் வேலை பார்ப்­ப­தற்­குப் பழ­கி­யி­ருக்­கலாம். இத்­த­கை­யோ­ருக்கு வீட்­டில் வேலை பார்ப்­பது, அலு­வ­ல­கத்­திற்­குச் செல்­வது இரண்­டை­யும் கையாள்வது சிர­ம­மாக இருக்­கக்­கூ­டும்.

படிப்­ப­டி­யாக இந்த முறைக்கு மாறிக்­கொள்­ள­லாம். வாரந்­தோ­றும் இரண்டு நாள்­க­ளுக்கு வீட்­டில் வேலை பார்ப்­பது நல்­லது என்று சில ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

இதன் தொடர்­பில் தங்­க­ளுக்கு எது நல்­லது என்­பதை அறிந்து எத்­த­கைய முயற்­சி­களை எடுக்­க­லாம், அவற்­றில் எவை ஆக்­க­பூர்­வ­மா­னவை ஆகி­ய­வற்றை நிர்­வா­கி­யு­டன் கலந்­து­பே­சு­மாறு ஊழியர்களுக்கு அறி­வுரை வழங்கு­கி­றார் சிங்­கப்­பூர் மனி­த­வ­ளக் கழ­கத்­தின் தலை­வ­ர் லோ பெக் கெம்.

ஒரு நாளில் செய்­து­மு­டிக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் யாவை என்­ப­தைக் குறித்­து­வைக்­கு­மா­றும் திரு நாயர் பரிந்­து­ரைக்­கி­றார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை எடுத்­தும் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­னால் வேலை தொடர்­பில் ஆலோ­ச­னை­யும் அறி­வு­ரை­யும் வழங்­கக்­கூ­டிய நிபு­ணத்­துவ ஆலோ­ச­கரை நாட­லாம் என்று குறிப்­பி­டப்­ப­டு­கிறது. நமது நேரத்­திற்கு நாமே பொறுப்பு என்­பது வலி­யு­றுத்­தப்­படுகிறது.