கிரேத்தா ஆயரில் தேசிய தின ஓவியங்கள்

கிரேத்தா ஆயரில் தேசிய தின ஓவியங்கள்

1 mins read
ecb6eac9-7ff1-4c80-a079-eeace2f63ab9
ஹொங் லிம் ஈரச்சந்தை, உணவங்காடிக்கு வெளியே தாம் வரைந்த ஓவியத்துடன் திருவாட்டி பெலிண்டா லோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நாள்­பட்ட நோய்க்கு ஆளா­ன­போதும் தான் அதீத காதல் கொண்ட ஓவி­யக் கலை­யைக் கைவி­ட­லில்லை திரு­வாட்டி பெலிண்டா லோ. 64 வய­தான இவ­ரின் இரண்டு ஓவி­யங்­கள் உள்­பட ஒன்­பது ஓவி­யங்­கள் கிரேத்தா ஆய­ரில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

பின்னணியில் மரினா பே பகுதி. அங்கு மீன் சூப் விற்கும் கடையும் ஒரு குடும்பமும் இடம்பெறும் ஓவியம் திருவாட்டி லோவின் படைப்புகளில் ஒன்று.

பல வார இறுதிகளில் அயராது உழைத்து இவர் தனது ஓவியங்களை உருவாக்கினார்.

தேசிய தினத்­தை­யொட்டி சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றுச் சிறப்­பை­யும் முக்­கிய இடங்­க­ளை­யும் சித்­தி­ரிக்­க இந்த ஓவியங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

ஒன்­பது ஓவி­யர்­களுடன் 200க்கும் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் சமூ­கப் பங்­கா­ளி­கள் ஆகி­யோர் இணைந்து வடி­வமைத்­துள்­ள­னர்.