கிழக்கு உக்ரேனில் போர் தொடர்கிறது. ஒருசில உணவகங்கள் மட்டுமே அப்பகுதியில் தொடர்ந்து இயங்குகின்றன.
அவற்றில் ஒன்று சமையல் கலைஞர் இகோர் பெஸுக்ஸ் வேலை செய்யும் இந்த 'சுஷி' உணவகம். இவர் பல ஆண்டுகளாக இங்கு வேலை செய்து வருகிறார்.
பாதுகாப்பையொட்டி வாடிக்கையாளர்களுக்கு இந்த உணவகத்தில் அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது. தற்போது இதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலோர் ராணுவ வீரர்களே.
இப்போதைக்கு இந்த உணவகம் ஒரு நாளைக்கு 10லிருந்து 30 உணவு வகைகளைத் தயார் செய்கிறது. இங்கு நேரத்திற்கு உணவு வழங்கப்படுகிறது.

