பரதம் 2022: மாணவர்கள் பங்குபெறும் தேசிய அளவிலான பரதநாட்டியப் போட்டி

பரதம் 2022: மாணவர்கள் பங்குபெறும் தேசிய அளவிலான பரதநாட்டியப் போட்டி

1 mins read

தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, உயர்­கல்வி மாண­வர்­க­ளுக்­கான தேசிய அள­வி­லான பர­த­நாட்­டி­யப் போட்­டிக்கு தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற இந்­திய நற்­ப­ணிச் செயற்­குழு ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறது.

'பர­தம் 2022' பாரம்­ப­ரிய நட­னப் போட்­டி­யின் இறு­திச்­சுற்று தோ பாயோ வெஸ்ட் சமூக மன்ற பன்னோக்கு அரங்­கில் நாளை மறு­நாள் 23ஆம் தேதி சனிக்­கி­ழமை மாலை 4.30 மணி­யில் இருந்து இரவு 8 மணி­வரை இடம்­பெ­ற­ உள்­ளது.

தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, உயர்­கல்வி ஆகிய மூன்று பிரி­வு­க­ளி­லும் இறுதிச் சுற்­றுக்கு முன்­னே­றியோர், உள்­ளூர், வெளி­நாட்டு நடு­வர்­கள் முன்­னி­லை­யில் தங்­க­ளது நட­னத் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வர்.

வெற்­றி­யா­ளர்­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­கள் வழங்­கப்­படும்.

நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

கூடுதல் ­வி­வ­ரங்­க­ளுக்கு 9489 8272, 9145 4375, 9455 1255 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.