இளையர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது 'கிருஷ்ணா அவர் கைட்' அமைப்பு. 79, ஆயர் ராஜா கிரசென்டில் அமைந்துள்ள 'ஏஸ் ஐடியேஷன் சென்டர்' கட்டடத்தில் நாளை மறுநாள் 23ஆம் தேதி சனிக்கிழமை இடம்பெறும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இளையர்களுடன் கலந்துறவாடும் வாய்ப்பு, பல்வேறு விளையாட்டுகள், இலவச உணவு எனப் பல சுவாரசியமான அங்கங்களைக் கொண்டுள்ளது இந்த நிகழ்ச்சி. 13 முதல் 26 வயதிற்குட்பட்டோர் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்கலாம். அனைவருக்கும் அன்பளிப்புப் பை உண்டு. ஒன்றுகூடலில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/tmY5xcxf7GuE3RQJ7 எனும் இணையப்பக்கம் வழியாகப் பதிவுசெய்துகொள்ளலாம். மேல்விவரங்களுக்கு 9148 1607 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.
பல அங்கங்களுடன் 13-26 வயதிற்குட்பட்ட இளையர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி
1 mins read

