தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் சிங்கப்பூரை ஒளி வெள்ளத்தில் மூழ்க வைக்கும் இரவுத் திருவிழா

1 mins read
34f451a8-a6a5-4dc0-9a7e-d9dee390240b
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 4

ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா.

அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரத்தில் இது நடைபெறும். மறுபிறப்பு எனப் பொருள்படும் 'ரீபர்த்' என்பது 13வது முறையாக நடைபெறும் இவ்விழாவின் கருப்பொருள்.

கொவிட்-19 நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் மீண்டுவந்துள்ள நிலையில் இது பொருத்தமான கருப்பொருள் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் விழாவில் இம்முறை 55க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்கலாம். பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரம் குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவை அமைந்திருக்கும்.