இரவுச் சந்தையின் வரலாற்றைப் படம்பிடித்து காட்டும் 'பசார் மாலாம்' கண்காட்சி

இரவுச் சந்தையின் வரலாற்றைப் படம்பிடித்து காட்டும் 'பசார் மாலாம்' கண்காட்சி

1 mins read
688e71b5-9e05-4372-8191-21b6f8da270b
இரவுச் சந்தையின் வரலாறு பற்றிய தகவல்களைத் தாங்கிய 'லேலோங் லேலோங்!' கண்காட்சி. படம்: தேசிய மரபுடைமைக் கழகம் -

வாய்க்கு ருசி­யான தின்­பண்­டங்­கள், வீட்­டுப் பொருள்­கள், ஆடை அணி­க­லன்­கள் ஆகி­ய­வற்றை மலி­வான விலை­யில் வாங்­கு­வ­தற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் அதி­கம் நாடும் ஒன்று 'பசார் மாலாம்'. அன்­றும் இன்­றும் தொடர்ந்து நிலைத்து வந்­துள்ள இர­வுச்­சந்­தை­க­ளின் வர­லாற்­றைப் பற்­றிய கண்­காட்சி, இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து ஆண்­டி­றுதி வரை நடை­பெ­று­கிறது.

தேசிய மர­பு­டை­மைக் கழ­கத்­தின் 'ஹெரிட்­டேஜ் ஆன் தி மூவ்' திட்­டத்­தின்­கீழ் 'லேலோங்! லேலோங்! சிங்­கப்­பூ­ரில் பசார் மாலாம்' என்ற பெய­ரி­லான கண்­காட்சி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இர­வுச்­சந்­தை­கள் எப்­படி உரு­வா­கின, கால­வோட்­டத்­தில் எவ்­வாறு உரு­மா­றின ஆகி­ய­வற்றை ஆரா­யும் இக்­கண்­காட்­சி­யில், சந்தை­களில் விற்­கப்­படும் பல­வி­த­மான பொருள்­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், பொது­மக்­கள் இது­வரை சந்­தை­களில் வாங்­கிய பொருள்­களும் விற்­பனை செய்த பொருள்­களும் கண்­காட்­சி­யில் வைக்­கப்­ப­டு­கின்­றன.

ஜூலை மாதம் முழு­வ­தும் செம்­ப­வாங் நூல­கத்­தி­லும், ஆகஸ்ட் மாதம் தோ பாயோ நூல­கத்­தி­லும், செப்­டம்­பர் மாதம் அங் மோ கியோ நூல­கத்­தி­லும், அக்­டோ­பர் மாதம் செங்­காங் நூல­கத்­தி­லும், டிசம்­பர் மாதம் ஜூரோங் மேற்கு நூல­கத்­தி­லும் இக்­கண்­காட்சி நடை­பெ­று­கிறது.

செய்தி: ஹர்­ஷிதா பாலாஜி