தனியொரு கூண்டைத் தேடிச் செல்லும் இளம் சிங்கப்பூரர்கள்

தனியொரு கூண்டைத் தேடிச் செல்லும் இளம் சிங்கப்பூரர்கள்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான இளை­யர்­கள் தங்­கள் பெற்­றோ­ரு­டன் ஒரே வீட்­டில் தங்­கி­யுள்­ள­னர். இருப்­பி­னும் தற்­போ­தைய சமூக நிய­தி­கள் மாறி­வ­ரும் நிலை­யில் சிலர் தங்­க­ளுக்­கென ஒரு தனி இடத்­தைத் தேடிக்­கொள்­ளும் போக்கு அதி­க­ரித்­துள்­ளது.

மேற்­கத்­திய நாடு­களில் பெற்­றோரின் வீட்டை விட்டு இளை­யர்­கள் வேறு இடத்­திற்­குச் செல்­வது என்­பது பெரி­ய­வர் ஆன­தற்­கான ஒரு மைல்­கல்­லா­கக் கரு­தப்­ப­டு­கிறது. இருப்­பி­னும் பெரும்­பா­லான ஆசிய சமூ­கங்­களில் அது கலா­சார அடிப்­ப­டை­யில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

மேலும், அவ்­வாறு இளை­யர்­கள் செய்­தால் பெற்­றோரை அவ­ம­திப்­ப­தா­கக்­கூட கரு­தப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் குறிப்­பாக, ஒரு­வ­ருக்­குத் திரு­ம­ண­மா­கும்­வரை அவர் பெற்­றோ­ரு­டன் வசிப்­பது வழக்­கம்.

2013ஆம் ஆண்டு ஆய்வு ஒன்­றில் தங்­கள் பெற்­றோ­ரு­டன் வசிக்­கும் 34 வய­துக்­கும் குறைந்த திரு­ம­ண­மா­கா­த­வர்­கள் 97 விழுக்­காட்­டி­ன­ராக இருந்­த­னர்.

இருப்­பி­னும் அண்­மைய ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரின் வாடகை கலா­சா­ரம் தலை­தூக்­கி­யுள்ள நிலை­யில் உள்­ளூர்­வா­சி­களும் தங்­க­ளுக்­கென ஓர் இடத்­தைத் தேடிக்­கொள்­கி­றார்­கள். திரு­ம­ண­மா­காத, 35 வய­துக்­குக் குறைந்த சிங்­கப்­பூ­ரர்­கள் தனி­யா­கவோ தங்­கள் பெற்­றோ­ரைப் பிரிந்தோ வாழ்­வது 2015ஆம் ஆண்­டில் பதி­வான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் 2020ஆம் ஆண்­டில் இரட்­டிப்­பா­கி­யது.

உள்­ளூர் சொத்­துச் சந்தை தள­மான 'ப்ரோ­பர்­டி­குரு', கடந்த ஆண்டு நடத்­திய ஆய்­வுப்­படி, 22 வய­துக்­கும் 39 வய­துக்­கும் இடைப்­பட்ட 10ல் எழு­வர் தங்­கள் பெற்­றோ­ரின் வீட்­டி­லி­ருந்து வெளி­யே­றத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­திருந்­த­னர். ஒரு குறிப்­பிட்ட வய­தைத் தாண்­டி­ய­தும் பெற்­றோ­ரு­டன் ஒரே வீட்­டில் இருப்­பது மகிழ்ச்சி அளிக்­காது. விருப்­ப­மா­ன­தைச் செய்­யும் சுதந்­தி­ர­மும் இருக்­காது என்­கின்­ற­னர் சிலர்.

பல்­க­லைக்­க­ழக தங்­கு­வி­டு­தி­கள், வெளி­நாட்­டில் படிக்­கும் காலத்­தில் வாட­கைக்­குத் தங்­கிய அறை­கள் என இளை­யர்­கள் சிலர் சுதந்­தி­ரத்தை அனு­ப­வித்­து­விட்ட நிலை­யில் மீண்­டும் பெற்­றோ­ரு­டன் ஒரே வீட்­டில் வசிக்­கத் தயங்­கு­வர்.

தனக்­காக அனைத்­தை­யும் செய்­வ­தற்கு வீட்­டில் ஒரு­வர் இருக்­கும்­போது சோம்­ப­லும் சில­ருக்­குத் தலை­காட்­ட­லாம்.

தங்­கள் வாழ்க்­கை­யின் அனைத்து அம்­சங்­க­ளை­யும் தாங்­களே கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும் என்று சில இளை­யர்­கள் விரும்­பு­வ­தும் உண்டு. பெற்­றோ­ருக்­குப் பிள்­ளை­யாக மட்­டுமே இருக்க வேண்­டாம் என்று எண்ணி இவர்­கள் தங்­க­ளுக்­கென ஓர் அடை­யாளத்தை உரு­வாக்­கிக்­கொள்ள விரும்­பு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, தங்­கள் பெற்­றோரை விட்டு தூர இருப்­ப­தால் சண்டை சச்­ச­ர­வு­கள் குறை­வ­தா­கக் கூறும் இளை­ய­ரும் உண்டு. அத­னால், வெவ்­வேறு வீடு­களில் இருப்­ப­தால் உறவு மேம்­ப­டு­வ­து­டன் பல­நாள் கழித்து நடக்­கும் சந்­திப்­பு­களும் இனி­மை­யாக அமை­வ­தாக சிலர் கூறு­கின்­ற­னர்.

செய்தி: இணை­யம்