நீங்கள் வேலை செய்வதை ஒருவர் பார்ப்பதற்கு மாதம் $56 தருவீர்களா?

நீங்கள் வேலை செய்வதை ஒருவர் பார்ப்பதற்கு மாதம் $56 தருவீர்களா?

2 mins read

வீட்­டில் இருந்­த­வாறு வேலை செய்­வது கடந்த ஈராண்­டு­க­ளாக வழக்­க­நி­லை­யா­கி­விட்­டது. இருப்­பினும் வீட்­டில் சொகுசு நாற்­காலி, மேசை­யில் அமர்ந்­தா­லும் அலு­வ­ல­கத்­தில் வேலை பார்ப்­பது போன்ற உணர்வு அதி­க­மா­னோ­ருக்கு ஏற்­படு­வ­தில்லை.

ஊழி­யர்­கள் சிலர், இத­னா­லேயே தங்­கள் வீட்டு அலு­வ­ல­கத்­தில் ஒரு புதிய வேலை­மு­றை­யைக் கையாளத் தொடங்­கி­யுள்­ள­னர்.

அறை­யின் நான்கு சுவர்­க­ளுக்­குள் தாங்­கள் வேலை பார்ப்­பதை அவ­ருக்கு அறி­மு­கமே இல்­லா­த­வர்­கள், ஒரு மணி­நே­ரம் முதல் மூன்று மணி­நே­ரம்­வரை ஸூம் தளம்­வழி பார்க்­க­லாம். அந்­நி­யர் தாங்­கள் வேலை செய்­வ­தைப் பார்ப்­ப­தற்கு 39.99 அமெ­ரிக்க டாலர் ($56) தர­வும் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­னர் தயா­ராக உள்­ள­னர்.

இது­போன்ற சேவையை தொழில்­மு­னை­வர்­கள், மாண­வர்­கள், கற்­றல் குறை­பா­டுள்­ள­வர்­கள் போன்­றோர் அதி­கம் நாடு­கின்­றனர். தங்­கள் வாழ்க்­கை­யில் ஒரு­வித கட்­டொ­ழுங்­கைக் கொண்­டு­வ­ர­வும் தங்­கள் செயல்­பா­டு­க­ளுக்­குப் பொறுப்­பேற்­க­வும் இந்­தத் தளம் உத­வு­வ­தாக அவர்­கள் நம்­பு­கின்­றனர். தனித்து வேலை பார்க்­கும் சுதந்­தி­ரம், கூடவே ஒரு­வர் இருப்­பதை உணர்­தல் என இரண்­டை­யும் தாங்­கள் அனு­ப­விப்­ப­தாக இந்த வேலை­மு­றை­யைக் கையாள்­வோர் கூறு­கின்­ற­னர்.

இதே கண்­கா­ணிப்பு முறை­யைப் பின்­பற்­றும் மற்­றொரு தள­மான 'ஃபோகஸ்­மேட்', பய­னா­ளர்­க­ளுக்கு ஐந்து அமெ­ரிக்க டால­ரில் சேவை வழங்­கு­கிறது. வெளி­நாட்­டில் இருக்­கும் ஒரு­வ­ரு­டன் ஒன்­றுமே பேசாத நிலை­யில் வேலை பார்ப்­ப­தாக அந்­தச் சேவை அமைந்­தி­ருக்­கும்.

அமர்வு தொடங்­கும்­போது இரு­வ­ரும் தாங்­கள் அடைய விரும்­பும் குறிக்­கோ­ளைப் பகிர்ந்­து­கொள்­வர். பின்­னர், அவ­ர­வர் தத்­தம் வேலை­யில் மௌன­மாக ஈடு­ப­டு­வர். பின்­னர், அமர்வு முடி­யும்­போது தங்­கள் இலக்கை அடைந்­தார்­களா என்று பகிர்­வர்.

அலு­வ­ல­கத்­தில் அரு­கில் இருப்­ப­வர் கேள்வி கேட்­டுக்­கொண்­டும் கூச்­ச­லிட்­டுக் கொண்­டும் இருக்­கும்­போது அது தொல்­லை­யாக இருக்­கும். ஆனால், இது­போன்ற அமை­தி­யான துணை­யைக் கொண்டு நிம்­ம­தி­யாக வேலை பார்க்க முடி­கி­ற­தாம்.

செய்தி: நியூ­யார்க்­டைம்ஸ்