சமயச் செய்தி

சமயச் செய்தி

1 mins read

ஈசூன் அவென்யூ 3ல் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் மாத இறுதிவரை ஆடிப்பூர மஹா பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு காலை 6.30 மணி முதல் 10 மணி வரை பால்குடம், கும்பிடுதண்டம், அங்கபிரதட்சணம், மாவிளக்கு ஆகிய நான்கு வித காணிக்கைகள் நடைபெறும். இன்று, நாளை, வரும் 30, 31 ஆகிய தேதிகளில் மட்டும் முடிக் காணிக்கை செலுத்தலாம்.

காலை 9 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள், சிறப்பு யாகம், பூர்ணாஹூதி, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.